துளசி தீர்த்தம் மற்றும் கார்த்திகை மாத விரதத்தின் மகிமை ஆதாரம் - பத்ம புராணம் ஆதாரம் - பத்ம புராணம் / உத்தர காண்டம் / அத்தியாயம் 6 வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 முன்னொரு காலத்தில் "கர்மவீரபும்" என்ற ஊரில் தர்மதத்தன் என்ற பெயருடைய ஒரு பிராமணன் வசித்தான். அவன் சதா காலமும் பகவான் விஷ்ணுவை ஆராதித்து வந்ததோடு பகவானுக்குப் பிரியமான விரதங்களையும் நியமம் தவறாமல் அனுசரித்து வந்தான், துவதாச அட்சர மந்திரத்தையும் "ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்ற மந்திரத்தையும் இடையறாமல் ஜெபித்துவந்தான். அதிதிகளை உபகரிப்பதிலும் சிறந்து விளங்கினான். கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் இரவு பகவான் ஹரியை தியானித்தபடி விழித்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் பயங்கரமாக அலறிக்கொண்டு வந்த ராட்சசியைக் கண்டான். ரத்தத்தைப் போல் சிவந்த கண்களும் அகன்ற தாடையில் வெளிப்பட்டுக் காணப்பட்ட கோரப் பற்களுமாக அவள் மிகவும் பயங்கரமாகக் காட்சியளித்தாள் உடம்பில் ஆடையில்லாமலும், பிணவாடைவீசக்கூடிய நீண்ட கரங்களை அசைத்தபடியாகவும், பயங்கரமான அலறலோடு ...