Skip to main content

Posts

Showing posts from June 12, 2025

ஜாக்கிரதையாக இருங்கள் ! ஜாக்கிரதையாக இருங்கள் !

வடநாட்டில் காசிக்குச் செல்லும் வழியில ஹரிஜன் ஒருவன் வசித்து வந்தான் அவன் திருமணமாகி நெடு நாளாகியும் குழந்தை இல்லாமல் இருந்தான். ஒரு பெரியவரிடம் தன் குறையைக் கூறினான். அவர் தர்மம் செய்தால் அதன் பயனாக குழந்தை உண்டாகும் என தேற்றினார். எந்த முறையில் தர்மம் செய்ய வேண்டுமென்று கேட்டான். அக்காலம் கோடை காலம். அதனால் அவ் வழியாக காசிக்குப் போகும் ஓர் அந்தணனுக்கு ஒரு குடை ஒரு மிதியடி ஒரு விசிறி இம் மூன்றையும் தானமாகக் கொடுத்தால் அவர்களுடைய ஆசியால் உனக்கு குழந்தை உண்டாகும் என்றார்.   தான் ஒரு தாழ்த்தப்பட்டவன் ஆதலால் அந்தணனுக்கு எவ்வாறு தானம் செய்ய முடியும் என சிந்தித்தான் ஒரு குடை ஒரு மிதியடி ஒரு விசிறி இம் மூன்றையும் தயாரித்து எதிரிலுள்ள மரத்தடியில் வைத்து விட்டு தேவைப்படுவோர் எடுத்துக் கொள்ளுங்கள் என்று எழுதி வைத்துவிட்டு தன் தொழிலில் ஈடுபட்டான்.  அந்தணர் ஒருவர் தன் இறுதிக் காலம் நெருங்குவதற்குள் காசிக்குச் சென்று வர வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கால்நடையாகப் புறப்பட்டார். அது கோடைக்காலம் வெயில்  வெப்பத்தால் துன்பத்திற்கு ஆளானார் . சிறு தூரத்தில் தான் சென்று கொண்டிருந்த வழியில் ...

துறவி மற்றும் ஆடு

ஒரு நாள் ஒரு துறவி ஒரு கிராமத்தின் வழியாகப் பயணித்துக்கொண்டிருந்தார். அந்தப் பாதையில் அவர் செல்லும் போது, ஒரு குயவன், தனது வீட்டின் முன் அமர்ந்து பானைகள் செய்து கொண்டிருந்தான். அருகில் ஏராளமான மண் பானைகள், சட்டிகள், குடங்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த இடத்திலேயே, ஒரு ஆடு ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அது ஓர் நொடிக்கும் அமைதியின்றி கதறிக் கொண்டே இருந்தது. துறவி அந்த இடத்தில் வந்து தரையில் அமர்ந்தார். அவரைக் கண்டதும், குயவன் மரியாதையுடன் வணங்கி, ஒரு சிறிய மண் சட்டியில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். தண்ணீரைப் பருகிய துறவி கேட்டார்: “இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா?” “இல்லை சுவாமி,” என்றான் குயவன். “இது காட்டாடு. வழியில் வந்ததைக் கண்டு பிடித்து கட்டிப் போட்டேன்.” “எதற்காக?” என்று சற்றே வியப்புடன் கேட்டார் துறவி. “ஒரு பண்டிகை வரவிருக்கிறது. அந்த நாளில் இறைவனுக்குப் பலி கொடுக்கலாம் என்று வைத்திருக்கிறேன்,” என்றான் குயவன். துறவியின் முகத்தில் மேலும் ஆச்சரியம் தெரிந்தது. “பலியா?” என்று கேட்டார். “ஆமாம் சுவாமி. திருவிழா தினங்களில் இறைவனுக்குப் பலி கொடுக்கப்படும். அது அவருக்...