Skip to main content

Posts

Showing posts from July 8, 2023

தூய பக்தனோருவன் குழப்பங்களை உண்டாக்குவதற்குப் பதிலாக, பகவானின் தாமரைப் பாதங்களை இதய பூர்வமாக ஏற்று இடைவிடாமல் பூஜிக்கிறான்.

  பரம் பதம் வைஷ்ணவம் ஆமனந்தி தத் யன் நேதி நேதீதி அதத் உத்ஸிஸ்ருக்ஷவ : விஸ்ருஜ்ய தௌராத்மியம் அனன்ய - சௌஹ்ருதா ஹ்ருதோபகுஹ்யார்ஹ - பதம் பதே பதே மொழிபெயர்ப்பு பரமபுருஷரான விஷ்ணுவுடன் அனைத்தும் சம்பந்தப்பட்டுள்ள , அந்த மிகவுயர்ந்த நிலையை ஆன்மீகிகள் அறிந்திருப்பதால் , தெய்வீகமற்ற அனைத்தையும் விலக்கிவிட அவர்கள் விரும்புகின்றனர் . எனவே பகவானோடு பரிபூரண இணக்கம் கொண்டுள்ள தூய பக்தனோருவன் குழப்பங்களை உண்டாக்குவதற்குப் பதிலாக , பகவானின் தாமரைப் பாதங்களை இதய பூர்வமாக ஏற்று இடைவிடாமல் அவற்றைப் பூஜிக்கிறான் . பொருளுரை பகவத் கீதையில் , மத் - தாம ( எனது வசிப்பிடம் ) எனும் சொல் ஒரு சில தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருத்துப்படி , எல்லையற்ற ஆன்மீக வெளி ஒன்றுள்ளது . அதிலுள்ள உலகங்கள் வைகுண்டங்கள் , அல்லது முழுமுதற் கடவுளின் வசிப்பிடங்கள் என்று அழைக்கப்படுகின்றன . பௌதிக வானிற்கும் அதை மறைத்துள்ள ஏழு திரைகளுக்கும் மிகவும் தூரத்திலுள்ள அந்த ஆன்மீக வானத்தில் சூரியனோ அல்லது சந்திரனோ தேவை...