மத்–கர்ம–க்ரூன் மத்–பரமோ மத் 3 –ப 4 க்த: ஸங்க 3 –வர்ஜித: நிர்வைர: ஸர்வ–பூ 4 தேஷு ய: ஸ மாம் ஏதி பாண்ட 3 வ மொழிபெயர்ப்பு எனதன்பு அர்ஜுனா, எவனொருவன், எனது தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளானோ, பலன்நோக்குச் செயல்கள் மற்றும் மனக் கற்பனைகளின் களங்கங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளானோ, எனக்காக செயல்படுகிறானோ, என்னை தனது வாழ்வின் பரம இலக்காக வைத்துள்ளானோ, மற்றும் எல்லா உயிர்களிடத்திலும் நண்பனாக உள்ளானோ, அவன் நிச்சயமாக என்னை வந்தடைகின்றான். பொருளுரை: பகவானின் எல்லா ரூபங்களிலும் உயர்ந்தவராக விளங்கும் கிருஷ்ணரை ஆன்மீக வானிலுள்ள கிருஷ்ண லோகத்தில் அணுகுவதற்கும், அந்த உத்தம புருஷருடன் நெருக்கமான உறவு கொள்வதற்கும் எவரேனும் விரும்பினால், அந்த பரமனாலேயே இங்கே கூறப்பட்டுள்ள வழிமுறையை ஏற்றுக்கொள்வது அவசியம். எனவே, இப்பதம் பகவத் கீதையின் ஸாரமாகக் கருதப்படுகின்றது. உண்மையான வாழ்க்கையான ஆன்மீக வாழ்வைப் பற்றி அறியாமல், இயற்கையை ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தோடு ஜடவுலகில் ஈடுபட்டுள்ள கட்டுண்ட ஆத்மாக்களுக்கான நூல் பகவத் கீதை. ஆன்மீக மான பரம புருஷருடனான நித்திய உறவைப் பற்றியும், ஆன்மீக இருப்பைப் பற்...