Skip to main content

Posts

Showing posts from June 12, 2021

பசுவின் விலை

 பசுவின் விலை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பிருகு முனிவரின் மகனாக, சியவனர் என்ற மாமுனிவர் இருந்தார். அவர் பெரும் தபஸ்வி. ஒரு தடவை, ஒரு விரதத்தை மேற்கொண்டு தண்ணீருக்குள்ளேயே வாழ்வது என்று நிச்சயித்தார். செருக்கு, சினம், மகிழ்ச்சி, இன்பதுன்பம், சோகம் ஆகியவற்றைத் துறந்து பன்னிரண்டு ஆண்டுக்காலம் தண்ணீருக்குள் சமாதி நிலையில் இருந்தார். மகாத்மாவான அவருடைய, பிற பிராணிகளுக்குத் தீங்கு செய்யாத இயல்பையும், தவத்தையும் கண்டு நீர்வாழ் பிராணிகள் அனைத்தும் அவருடன் நட்புப் பூண்டன. நீர்வாழ் மீன்கள் முதலியவற்றுக்கு அவரிடம் கொஞ்சம் கூட அச்சம் இல்லை. ஒரு தடவை, மாமுனிவரான சியவனர், மிகுந்த ஆர்வத்தோடும், வணக்கத்தோடும் கங்கை யமுனை கூடுமிடத்தில் தண்ணீருக்குள் புகுந்தார். சில வேளைகளில் ஜல-சமாதியில் இருப்பார் மற்றும் சில வேளைகளில் தண்ணீரின் மேல் அசைவற்று அமர்ந்திருப்பார். இம்மாதிரி விரதத்தைத் தவறாமல் செய்து நீண்ட காலத்தைக் கழித்துவிட்டார். ஒரு நாள் சியவனர் ஜல சமாதியாக தண்ணீருக்குள் இருக்கும் அதே இடத்தில் மீன்பிடிப்பதற்காக வலை எடுத்துக்கொண்டு சில செம்படவர்கள் வந்து சேர்ந்தார்கள். மீன் பிடிப்பதற்காக நீர் பரப்பில் வலையை வீ...

உண்மையான வைரம்

  உண்மையான வைரம்  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒரு வணிகர் நல்ல ஒட்டகம் ஒன்றை சந்தையில் வாங்க விரும்பினார். ஒட்டகத்தை பார்த்ததும் அதை விற்க வந்தவரிடம் அதன் விலையை பேசி முடிக்க ஆரம்பித்தார். வணிகருக்கும்,ஒட்டகம் விற்பனையாளருக்கு இடையில் நடந்த நீண்ட பேரம் பேசுதலுக்குப் பிறகு ஒருவழியாக ஒட்டகத்தை வாங்கி அதைத் தன் வீட்டிற்கு ஓட்டி வந்தார். வீட்டை அடைந்ததும் தன் வேலைக்காரனிடம் ஒட்டகத்தின்   சேனத்தை எடுக்குமாறு கூறினார். வேலைக்காரன் சேனத்தின்  அடியில் பளபளக்கும்   பை ஒன்று இருப்பதையும் அதனுள் விலைமதிப்பற்ற வைரக்கற்கள் நிறைந்து இருப்பதையும் கண்டான். அவன் தன் முதலாளியிடம் சத்தமாக, "முதலாளி ஐயா, நீங்கள் ஒட்டகம் தானே வாங்கினீர்கள், ஆனால் இங்கு பாருங்கள் அதனுடன் இலவசமாக என்ன வந்திருக்கிறது என்று". என்றான்.  வணிகரும் வேலைக்காரனின் கையில் இருந்த அந்த வைரங்கள் சூரிய ஒளியிலும் பளபளப்புடன் பிரகாசிப்பதை கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார். பின் வணிகர் கூறினார், "நான் ஒட்டகத்தை தான் வாங்கினேன், வைரத்தை அல்ல, எனவே இதை உடனே திருப்பிக் கொடுக்க வேண்டும்"என்றார். வேலைக்காரன் தன் ...

ஶ்ரீராமனின் சகோதரன் பரதனின் மகிமை

   ஶ்ரீராமனின்  சகோதரன் பரதனின் மகிமை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 அயோத்தியை ஆண்ட தசரத மன்னனுக்கு 3 மனைவியர்கள் (கௌசல்யா, கைகேயி, சுமித்திரை) மூவரிலும் தசரத மன்னனின் அன்பிற்கு அதிகம் பாத்திரமானவர் "கைகேயி". அவளுடைய மகன் பரதன். "மந்தரை" என்னும் கூனியால் ஏவப்பட்டு கைகேயி மூத்தவனாகிய ஶ்ரீ ராமனுடைய பட்டாபிஷேகத்தை முடங்கி விட்டாள். தனக்கு மன்னன் கொடுத்திருந்த இரண்டு வரத்தை அத்தருணத்தில் கேட்டு இராமன் காட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் பரதனே நாட்டை ஆளவேண்டும் என்றும் கேட்டு அந்த இரண்டு வரங்களையும் பெற்றாள். தந்தையின் வரம் பொய் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தானே முன்வந்து வனம் சென்றார் இராமன். பரதனை அரசனாக்கி கண்டு மகிழ கைகேயி தயாராக இருந்தாள். அந்த நிலையில் பரதன் ஆனந்தமாக அரியாசனம் ஏறுவதற்கு பதிலாக பெற்றெடுத்த அன்னையின் மீது சீறி விழுந்தான். "அம்மா நீ ஒரு பெண்ணாகியதால் உன்னை கொலை செய்யாமல் விடுகிறேன்". என்று தாயின் மீது சினம் கொண்டான். அண்ணனை அழைத்து வந்து அரியாசனம் ஏற்றி வைப்பேன். அண்ணன் வராவிடில் நானும் இந்த அயோத்தி நகர் வர மாட்டேன் என வீர சபதம் எடுத்தான். அண்ணனை அ...

அரிஷ்டாசுரன்

  அரிஷ்டாசுரன் ஆதாரம் :- கர்க சம்ஹிதை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒருநாள் கோப பாலர்களிடையே பலசாலியான அரிஷ்டாசுரன் வந்தான் பூமியையும் ஆகாயத்தையும் எதிரொலிக்கச் செய்தான். கொம்புகளால் மலைத் தடவரைகளைப் பிளந்து கொண்டு வந்தான். அவனைக் கண்டதுமே கோப கோபியர் பயத்தால் இங்குமங்கும் ஓடலாயினர். அசுரர்களை அழிக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களுக்கு பயப்பட வேண்டாம் என்று கூறி அபயமளித்தான். மாதவன் அதன் கொம்புளைப் பிடித்து பின்னால் (இடித்துத்) தள்ளினான். அந்த அரக்கனும் ஸ்ரீ கிருஷ்ணனை இரண்டு யோஜனை தூரம்  தள்ளிவிட்டான் .கிருஷ்ணர் அவனுடைய வாலைப்பற்றி வாயு வேகத்தில் சுழற்றி, ஒரு குழந்தை கமண்டலுவை வீசி எறிவது போல பூமியில் அறைந்தார்.  அரிஷ்டாசுரன் மறுபடி எழுந்தான். கோபத்தால் அவன் கண்கள் சிவந்தன. அந்த மகா துஷ்ட வீரன் கொம்புகளால் சிவப்புப் பாறைகளை வேரோடு பெயர்த்து மேகத்தைப் போல கர்ஜித்தபடி ஸ்ரீ கிருஷ்ணனின் மீது விசினான். ஸ்ரீ கிருஷ்ணன் அந்தப் பாறையைப் பிடித்து திருப்பி அவன்மீதே அடித்தார். அந்த அடியில் அவன் சிறிது வியாகூலமடைந்தான். அவன் தன் கொம்புகளின் முன்பாகத்தால் பூமியை அடிக்க, அதனால் பூமியிலிருந்து நீர் ...

அகாசுரன் முற்பிறவி

  அகாசுரன் முற்பிறவி ஆதாரம் :- கர்க சம்ஹிதை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸ்ரீ நாரதர் கூறுகினார் 'அரசே ஒருநாள் ஆயர்ச் சிறுவருடன் கன்றுகளை மேய்த்தவாறு காளிந்தியின் கரையருகே ஒரு அழகான இடத்தில் ஸ்ரீ ஹரி குழந்தைகளுக்கு உரியதான விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருந்தார். அச்சமயம் அகாசுரன் என்னும் பெரிய அசுரன்  தன் உருவத்தை (பாம்பு போல்) தரித்து பயங்கரமான வாயைத் திறந்து வைத்துக்கொண்டு வழியில் இருந்தான். தூரத்திலிருந்து ஏதோ மலை குகை என்று எண்ணும்படி காட்சியளித்தது. வ்ருந்தாவனத்தில் அதைக்கண்ட கோப பாலர்கள் கைதட்டியவாறு கன்றுகளோடு அதன் வாயினுள் புகுந்து விட்டனர். அவர்களனைவரின் பாதுகாப்பிற்க்காக பலராமருடன் ஶ்ரீ கிருஷ்ணரும் அகாசுரனது வாயில் புகுந்து விட்டார். சர்ப்பரூபம் தரித்த அந்த அசுரன் கன்றுகளையும் ஆயர்ச் சிறுவரையும் விழுங்கிவிட தேவர்களிடையே ஹாஹாகாரம் (உரத்த கோலாஹல ஒலி) எழுந்தது. அசுரர்கள் மகிழ்ச்சியுற்றனர். அச்சமயம் ஸ்ரீ கிருஷ்ணன் அகாசுரன் வயிற்றில் தனது விராட் ஸ்வரூபத்தைப் பெருக்கலானார். இதனால் அகாசுரன் ப்ராணன் தடுக்கப்பட்டு, அதன் தலையைப் பிளந்து கொண்டு வெளியேறியது. மிதிலை மன்னா, பின் பாலகர்களுடனும...

காளியன் யமுனை நதியில் வசிக்க காரணம்

  காளியன் யமுனை நதியில் வசிக்க காரணம் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பஹுலாஸ்வ மன்னன் கேட்டான், 'ரமணகத் தீவில் வாழ்ந்த மற்ற பாம்புகளை விட்டு விட்டு காளிய நாகத்திற்கு மட்டும் கருடனிடம் பயம் உண்டானது ஏன்? இந்த விஷயத்தைக் கூறுங்கள் ஸ்ரீ நாரதர் கூறினார் : மன்னா ! நாகங்களை அழிப்பவரான கருடன் ரமணகத் தீவிற்கு ஒவ்வொரு நாளும் சென்று ஏராளமான பாம்புகளை அழித்து வந்தார். அதனால் பயமும் கவலையுமடைந்த அங்கிருந்த நாகங்கள் ஒருநாள் கருடனிடம் இவ்வாறு கூறின." 'கருடனே, உனக்கு வணக்கம். நீ சாக்ஷாத் பகவான் விஷ்ணுவின் வாஹனமாவீர். இவ்விதம் நீங்கள் சர்ப்பங்களைச் சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்களானால் எங்கள் வாழ்விற்குப் பாதுகாப்பு ஏது? ஆகவே ஒவ்வொரு மாதமும் ஒருமுறை ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒரு சர்ப்பத்தை பலியாக ஏற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் வனஸ்பதி அல்லது அமுதத்திற்கு நிகரான இனிப்பு அன்னமும் உங்களுக்கு அளிக்கப்படும். அவற்றை முறைப்படி நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். கருடன் கூறினார்: 'நீங்கள் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு பாம்பை பலியாக ஒவ்வொரு நாளும் அளித்து வாருங்கள். பாம்பைத் தவிர நான் வேறு எந்த ப...

கோராகும்பர்

  கோராகும்பர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 கோராகும்பர் என்னும் கோராபா, தேராடோகி என்னும் கிராமத்தில் குயவர் குலத்தில் கி.பி 1267-ல் பிறந்தார். இளமைப் பருவத்திலிருந்தே சிறந்த விட்டல் பக்தராகத் திகழ்ந்தார், பானைகளைச் செய்யும் தன்னுடைய அன்றாட வேலைகளைச் செய்து கொண்டே பாண்டுரங்கனின் நாமத்தை இடைவிடாது உச்சரிப்பது இவரது வழிபாட்டின் சிறப்பம்சம். ஒருநாள் மண்பாண்டங்களைச் செய்ய களி மண்ணைக் காலால் மிதித்துக்கொண்டே பக்திப் பரவசத்துடன் மெய்மறந்து பாண்டுரங்கன் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மனைவி அவரிடம் தான் வெளியே செல்வதால் பச்சிளங்குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிச் சென்றாள். பாண்டுரங்கனிடம் மனதைப் பறி கொடுத்தவருக்கு இது காதில் விழவில்லை. தன்னை மறந்து மண்ணை இவர் மிதிக்க, குழந்தை மெல்ல மெல்லத் தவழ்ந்து மண்ணில் இறங்க, இவர் கண் மூடிய பக்திநிலையில் மண்ணோடு மண்ணாக அந்த பாலகனையும் சேர்த்து மிதிக்க, குழந்தை இறந்துவிடுகிறது.  வீடு திரும்பிய கோராபாவின் மனைவி, குழந்தைக்கு நேர்ந்த கதியைக்கண்டு கதறித் துடிக்கிறாள். அவரைக் கண்டபடி ஏசுகிறாள். மனம் புண்படும்படி வார்த்தைச் சரம் தொடுக்கிறாள். ...