Skip to main content

Posts

Showing posts from January 24, 2021

பிரம்மதேவர்

12 மஹாஜனங்கள் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1 பிரம்மதேவர்  வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இந்த பிரபஞ்ச படைப்பிற்கு  சற்று பின்னர் படைக்கப்பட்ட முதல் உயிர் வாழியே பிரம்மதேவர். அவர் பகவான் விஷ்ணுவின் நாபித்  தாமரையில் இருந்து பிறந்தவராவார்.  பௌதிக உலகப் படைப்பின் ஆரம்பத்தில் பிரம்மதேவரின் இதயத்தில் வேத அறிவை பகவான் புகட்டினார்.  வேதங்களை அவர் மூன்று முறை மிகுந்த சிரத்தையோடு படித்து வேதங்களின் நோக்கத்தை அறிவதில் கவனம் செலுத்தி அனைத்தையும் கவனமாக ஆராய்ந்த பின்னர் அனைத்து மத கொள்கைகளின் மிக உயர்ந்த பக்குவம் முழுமுதற்கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தூய்மையான அன்போடு இடையறாது பக்தித் தொண்டு  செய்வதே என்பதை உறுதிப்படுத்தினார். ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே அஹை துகி அப்ரதிஹதா  யயாத்மா ஸுப்ரஸீததி ( எதனால் மனிதன் பரம புருஷரின்  உன்னதமான பக்தித் தொண்டை பெற முடியுமோ அதுவே மனித வர்க்கம் முழுமைக்கும் தர்மமாகும்.  ஆத்மாவை பூரண திருப்தி படுத்துவதற்கு இத்தகைய பக்தித் தொண்டு உள்நோக்கம் இல்லாததாகவும் இடையறாத ஆகவும் இருக்க வேண்டும் ) ( ...