Skip to main content

Posts

Showing posts from September 27, 2022

விருந்தாவனத்தில் வசிப்பது என்றால் என்ன ?

கிருஷ்ண பக்தர்கள் எப்போதும் விருந்தாவனத்தில் வசிக்க விரும்புகிறார்கள். ஆனால் விருந்தாவனத்தில் வாழ்வது என்றால் என்ன? மேலும் அணைவரும் விருந்தாவனத்தில்  வாழ்வது சாத்தியமா ? என்பதை இனி விளக்கமாக கான்போம் விருந்தாவனத்தில் வசிப்பது என்றால் என்ன ? விருந்தாவனத்தில் வசிப்பது என்பது அங்கு உடல் ரீதியாக இருப்பது மட்டும் அல்ல. ஒருவன் விருந்தாவனத்தில் உடல் ரீதியாக தங்கியிருந்தாலும், பக்தியில் ஈடுபடாமல், பாவச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், அவன் உண்மையில் விருந்தாவனத்தில் வசித்து என்ன பயன் ? இப்படிப்பட்ட மனிதர்கள் உண்மையில் விருந்தாவணத்தில் வசிக்கவில்லை. ஆனால் ஒருவன் விருந்தாவனத்திருக்கு வெளியே எப்போதும் கிருஷ்ணரின் நாமங்களை உச்சரித்துக்கொண்டும், பல்வேறு கிருஷ்ண உணர்வு செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பானாயின், அவன் உண்மையில் விருந்தாவனத்தில் வசிக்கிறான். ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார், "ஒரு தூய பக்தன் தனது பக்தித் தொண்டினால் , விருந்தாவனத்தின் சூழலை எங்கு வேண்டுமானாலும் உருவாக்க முடியும்." இங்கே பிரபுபாதர் பக்தி தொண்டின் முக்கியத்துவத்தையும், நாம் தொடர்ந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டிருந்தால்,...

கிருஷ்ண பக்தியை எளிதாக மேற்கொள்வது எவ்வாறு?

கிருஷ்ணர் கூறுகிறார், அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு இலையோ, பூவோ, பழமோ, நீரோ அளித்தால் அதனை நான் ஏற்கின்றேன்.(பகவத் கீதை 9.26) பகவத் கீதை 9.26 ல் எவ்வாறு  கிருஷ்ண பக்தியை, எளிதாக பயிற்சி செய்து அதன் மூலம் கிருஷ்ணரை எவ்வாறு அடைவது என்பதை விளக்குகிறது. இந்த ஸ்லோகத்தில் கொடுக்கப்பட்ட செயல்முறை மிகவும் எளிமையானது மற்றும் இதை யார் வேண்டுமானாலும் பயிற்சி செய்ய முடியும். அது எவ்வாறு என்று மேலும் விவரமாக காண்போம் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் நமது செயலின் நோக்கத்தைக் மட்டுமே காண்கிறார் பிரபஞ்சம் முழுவதும் அணைத்தையும் படைத்த பரம புருஷ பகவானான கிருஷ்ணருக்கு நாம் பூரணமாக எதையும் அளிக்க முடியாது. ஏனெனில் அணைத்தும் நாம் அவரிடம் இருந்து பெற்றுள்ளோம். அதனால் நாம் அர்ப்பணிக்கின்ற பொருட்கள் மற்றும் அதன் மதிபை பற்றி அவர் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை, ஆனால் நாம் எந்த நோக்கத்துடன் அந்தப் பொருட்களை அவருக்கு வழங்குகிறோம் என்பதில் அவர் ஆர்வம் காட்டுகிறார். கிருஷ்ணர் பரம புருஷர். முழு படைப்பிலும் உள்ள அனைத்தையும் அவர் சொந்தமாக வைத்திருக்கிறார். அவர் தன்னிறைவு பெற்றவர். எனவே, அவருக்கு நம்மிடம் உள்ள எதுவும் த...