ஶ்ரீ ஶ்ரீ நந்த நந்தன அஷ்டகம் பதம் 1 ஸுசாரு வக்த்ர மண்ட லம் ஸுகர்ணரத்ன குண்ட லம் ஸுசர்சிதாங்க சந்த னம் நமாமி நந்த ³ நந்த ³ னம் மொழிபெயர்ப்பு வசீகரிக்கும் அழகிய வட்டமான திருமுகமும் , அழகிய ( மாதுளை பூ போன்ற ) காதுகளை ரத்தின குண்டலங்கள் அலங்கரிக்க , அவருடைய திருமேனி சுகந்தமான சந்தன கூழினால் பூசப்பட்டு வசீகரத்துடன் காட்சியளிக்கும் நந்த மகாராஜாவின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன் . பதம் 2 ஸுதீ ர்க நேத்ர பங்கஜம் சிகீ சிக ண்ட மூர்த ஜம் । அனங்ககோடி மோஹனம் நமாமி நந்த நந்த னம் மொழிபெயர்ப்பு அழகிய தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையுடையவரும் சிரசில் மயில்பீலிகளால் அலங்கரிக்கப்படும் பல கோடி கோடி மன்மதன்களை மயக்கும் நந்த மகாராஜாவின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன் . பதம் 3 ஸுநாஸிகாக் ர மௌக்திகம் ஸ்வச்ச த ந்த பங்க்திகம் நவாம்பு தா ங்க சிக்கணம் நமாமி நந்த நந்த னம் மொழிபெயர்ப்பு அவரது மூக்கின் நுன...