சகடாசுரன் 🌼🌼🌼🌼🌼🌼🌼 ஸ்ரீ கர்கர் கூறினார்: 'சௌனகரே! நான் ஸ்ரீகிருஷ்ணனுடைய சிறந்த திவ்ய சரித்திரத்தை வர்ணித்தேன். இதை பக்தியோடு கேட்பவன் பேறு பெற்றவனாகிறான். அவனுக்கு பரம புருஷார்த்தம் கிட்டிவிடுமென்பதில் ஐயமில்லை. ஸ்ரீ சௌனகர் கேட்டார்: 'முனிவரே! ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய மங்களமய சரித்திரம் அமுத ரஸத்தால் தயாரிக்கப்பட்டதான சிறந்த இனிய காண்டமாகும். (இனிப்பு பக்ஷணம்) இதை நேரடியாக தங்கள் வாயால் கேட்டு நாங்கள் தன்யமானோம். தவச்செல்வரே, சாதுக்களில் சிறந்தவரான பஹுலாஸ்வ மன்னன் ஸ்ரீகிருஷ்ணரின் பரம பக்தர். அவரது மனதில் எப்போதும் அமைதி குடிகொண்டிருந்தது. இதன் பிறகு அவர் நாரத முனிவரிடம் எந்த விஷயத்தைக் கேட்டார் என்பதைக் கூறியருளுங்கள். ஸ்ரீ கர்கர் கூறினார்: 'சௌனகரே! பின் மிதிலை மன்னன் பஹூலாஸ்வன் மகிழ்ச்சியும் அன்பும் ஒருங்கேயடைந்து பரவச நிலையடைந்தார். தர்மாத்மாவான அவர் பரிபூர்ணதம பகவான் ஸ்ரீகிருஷ்ணனை சிந்தித்தவாறு நாரதரிடம் கூறினார். பஹுலாஸ்வன் கூறினார்: 'முனிவரே! தாங்கள் மிக உயர்ந்த புண்ணியம் செய்துள்ளீர். தங்கள் சேர்க்கையால் நானும் பெறும்பேறு பெற்றவனானேன். ஏனெனில் பகவத் பக்தர்...