Skip to main content

Posts

Showing posts from April 28, 2026

பரம பக்தர்களுள் சிறந்த பிரகலாதர்

பகவான் நரசிம்மதேவர் ஒன்றன்பின் ஒன்றாக பிரகலாத மகாராஜனுக்கு வரங்களை அருள விரும்பினார். ஆனால் அவற்றை ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடைகளாக எண்ணிய பிரகலாதர் அவற்றில் ஒன்றைக்கூட ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, அவர் பகவானுடைய தாமரைப் பாதங்களில் பூரண சரணாகதியடைந்து, “பகவானுடைய பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள ஒருவன் சொந்த புலன் நுகர்வுக்காக பகவானிடம் பிரார்த்திப்பானாயின், அவனைத் தூய பக்தன் என்று அல்லது பக்தன் என்றுகூட அழைக்க முடியாது. கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ள ஒரு வியாபாரியாகவே அவன் அழைக்கப்படுவான். அது போலவே, தன் சேவகனிடமிருந்து சேவையைப் பெற்றுக்கொண்ட பின் அவனை திருப்திப்படுத்த விரும்பும் எஜமானரும் உண்மையான எஜமானரல்ல” என்று கூறினார். எனவே பிரகலாதர் பகவானிடமிருந்து எதையும் யாசிக்கவில்லை. மாறாக, பகவான் தனக்கு வரமருள விரும்பினால், பௌதிக வரங்களுக்கு தான் மயங்கிவிடாதிருக்கும் வரத்தை அருளும்படி பகவானிடம் அவர் வேண்டினார். பக்தித் தொண்டிற்குப் பதிலாக சிற்றின்ப சுகங்களை வேண்டுவது எப்பொழுதும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். சிற்றின்ப ஆசைகள் தலை தூக்கிய உடனேயே ஒருவனது மனம், வாழ்வு, ஆத்மா, சமயக் கோட்பாடுகள், பொற...

பிரகலாதர் பகவான் நரசிம்மரைசாந்தப்படுத்துதல்

  பிரகலாதர் பகவான் நரசிம்மரை சாந்தப்படுத்துதல்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   இரண்யகசிபுவைக் கொன்ற பிறகும் பகவானுடைய கோபம் தனியவில்லை . பிரம்மா முதலான தேவர்களாலும் அவரை சாந்தப்படுத்த இயலவில்லை . ஸ்ரீதேவியும் , நாராயணரின் இணையிரியா நாயகியுமான தாய் லக்ஷ்மிதேவிகூட , பகவான் நரசிம்மதேவர் முன் வரத் துணியவில்லை . பிறகு பிரம்மதேவர் , பகவானை அணுகி அவரைச் சாந்தப்படுத்தும்படி பிரகலாத மகாராஜனை கேட்டுக் கொண்டார் . தமது தலைவராகிய பகவான் நரசிம்மதேவர் தன்னிடம் கொண்டுள்ள பாசத்தில் முழு நம்பிக்கைக் கொண்டிருந்த பிரகலாதர் சிறிதும் அச்சப்படவில்லை . அவர் மௌனமாக பகவானுடைய தாமரைப் பாதங்களை அணுகி , மரியாதையுடன் அவரை வணங்கினார் . பகவான் நரசிம்மர் பிரகலாதரிடம் பேரன்பு கொண்டிருந்ததால் , அவர் தமது கையைப் பிரகலாதரின் தலைமேல் வைத்து அவரை ஆசீர்வதித்தார் . பகவானுடைய நேரடியான ஸ்பரிசத்தினால் பிரகலாதர் உடனே ஆத்ம ஞானத்தைப் ( ப்ரஹ்ம - ஞான ) பெற்றார் . இவ்வாறாக அவர் , பூரண ஆத்ம ஞானத்துடனும் , பக்தித் பரவசத்துடனும் பகவானை துதித்துப் போற்றினார் ...