Skip to main content

Posts

வத்ஸாசுரன்

  கோகுலத்தில் ஆயர்குலச் சிறுவர்களுக்குத் தரப்படும் முதல் பொறுப்பு கன்றுகளைப் பராமரித்தல், குழந்தைப் பருவத்திலிருந்தே சிறுவர்களுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. எனவே கிருஷ்ணரும் பலராமரும் மற்ற ஆயர்குலச் சிறுவர்களுடன் மேய்ச்சல் நிலங்களில் கன்றுகளைக் கவனித்தபடி விளையாடினார்கள். கன்றுகளைப் பொறுப்பேற்று அழைத்துச் செல்லும் போது சகோதரர்களான கிருஷ்ணரும் பலராமரும் சில வேளைகளில் புல்லாங்குழலை இசைத்தார்கள். சில வேளைகளில் அவர்கள் ஆமலகீப் பழங்களையும் பலாப்பழங்களையும் எடுத்துப் பந்தாடினார்கள். சில சமயங்களில் அவர்கள் கால் சலங்கைகள் ஒலிக்க நர்த்தனம் செய்தனர். சில வேளைகளில் அவர்கள் கம்பளங்களால் தங்களை மூடிக்கொண்டு எருதுகள் போலவும் பசுக்கள் போலவும் பாவனை செய்து விளையாடினர். பலராமரும் கிருஷ்ணரும் இப்படி விளையாடினார்கள். பசுக்களையும் எருதுகளையும் போல் உருமிக் கொண்டு சண்டை போடுவார்கள். இப்படியாக அவர்கள் சாதாரணக் குழந்தைகளைப் போல் குழந்தைத்தனமான விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தனர். ஒருநாள், கிருஷ்ணரும் பலராமரும் யமுனை நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது வத்ஸாசுரன் என்ற பெயருடைய அரக்கன் ஒரு கன்றின...

திருணாவர்தன் வதம் மற்றும் அவனது முற்பிறவி வர்ணனை

  திருணாவர்தன் 🌼🌼🌼🌼🌼🌼🌼 பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்து லீலைகளைக் கேட்பதற்குப் பரீட்சித்து மகாராஜன் ஆவலுடன் காத்திருந்தைக் கண்ட சுகதேவ கோஸ்வாமி, மிகவும் மகிழ்ந்து, தொடர்ந்து பேசத் துவங்கினார். மூன்று மாதக் குழந்தையாக இருந்த கிருஷ்ணர் குப்புறத் திரும்ப முயன்ற சமயத்தில், தவழ்ந்து செல்ல முயலும் முன்பாகவே, குழந்தையின் நல்லதிர்ஷ்டத்திற்காகத் தன் தோழிகளுடன் ஒரு சடங்கைச் செய்ய தாய் யசோதை விரும்பினாள். இத்தகைய ஒரு சடங்கு, பொதுவாக, சிறு குழந்தைகளையுடைய மற்ற பெண்களுடன் நடத்தப்படுவதாகும். மற்ற வேலைகளில் ஈடுபட்டிருந்த தாய் யசோதை, கிருஷ்ணர் தூங்கி விழுவதைக் கண்டு, வீட்டு உபயோகத்திற்காக உள்ள சகடம் என்ற ஒரு வண்டிக்கடியில் குழந்தையைப் படுக்க வைத்தாள். குழந்தை உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில், குழந்தைக்கு மங்களச் சடங்கு செய்வது சம்பந்தமான வேறு வேலைகளில் அவள் ஈடுபட்டிருந்தாள். அந்த வண்டிக்கடியில் ஒரு தொட்டில் இருந்ததுது. அதில்தான் அவள் குழந்தையைத் தூங்க வைத்தாள். குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று விழித்துக் கொண்ட குழந்தை, வழக்கமாக எல்லாக் குழந்தைகளும் கால்களை உதைப்பது ப...

பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

 

பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

 

தன்னையறியும் விஞ்ஞானம்

 

தூய பக்தித் தொண்டு

 

எந்த பிரயாணச் சீட்டை வாங்கினாலும் ஒரே இலக்கை அடைய முடியுமா ?

  எந்த பிரயாணச் சீட்டை வாங்கினாலும் ஒரே இலக்கை அடைய முடியுமா ?  🍁🍁🍁🍁🍁🍁 பகிரங்க (புற) சக்தியின் ஜடக் குணங்களில் சிக்கிக் கொண்டுள்ளவர்கள் மட்டுமே வெவ்வேறு வகையான ஜட இன்பங்களால் அடிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அதாவது,ஆன்மீகிக்கு பௌதிக ஆசைகள் கிடையாது. ஆனால் உலகாயதவாதியோ எல்லா வகையான ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறான். மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல், பௌதிக இன்பத்திற்கு ஆசைப்பட்டு வெவ்வேறு தேவர்களின் உதவியை நாடும் உலகாயதவாதிகளின் புலன்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாததால், தங்களை அபத்தங்களுக்கு அர்ப்பணித்து விடுகின்றனர். ஒருவன் பரமபுருஷ பகவானை வழிபடுவதற்குப் போதுமான அறிவு படைத்தவனாக இருந்தால், எவ்விதமான ஜட இன்பத்தையும் அவன் விரும்பக்கூடாது. புத்தியற்றவர்களின் தலைவர்கள் இன்னும் அதிக புத்தியற்றவர்களாக இருக்கின்றனர். ஏனெனில் எந்த தேவரை ஒருவன் வழிபட்டாலும் அதன் பலன் ஒன்றுதான் என்று அவர்கள் வெளிப்படையாகவும், முட்டாள்தனமாகவும் பிரச்சாரம் செய்கின்றனர். இதைப் போன்ற பிரச்சாரம் பகவத் கீதை அல்லது ஸ்ரீமத் பாகவதத்தின் போதனைகளுக்கு எதிரானது மட்டுமல்லாமல், முட்டாள்தனமானதும் ஆகும்...
 

சுகதேவ கோஸ்வாமியின் பிரார்த்தனைகள்

ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 2 / அத்தியாயம் 4 / பதம் 12- 23 ************************************************************************* பதம் 12 ஸ்ரீசுக உவாச நம : பரஸ்மை புருஷாய பூயஸே ஸத் - உத்பவ - ஸ்தான - நிரோத - லீலயா க்ருஹீத - சக்தி - த்ரிதயாய தேஹினாம் அந்தர்பவாயானுபலக்ஷ்ய - வர்த்மனே மொழிபெயர்ப்பு சுகதேவ கோஸ்வாமி கூறினார் : ஜட உலகை சிருஷ்டிப்பதற்காக இயற்கையின் முக்குணங்களை ஏற்கும் பரமபுருஷ பகவானிடம் எனது பணிவான வணக்கங்களா நான் சமர்ப்பிக்கிறேன் . நினைத்தற்கரிய செயல்களைப் புரிபவரான அவரே அனைவரின் உடலிலும் வாழும் பூரண முழுமையாவார் .   பதம் 13 பூயோ நம : ஸத் - வருஜின - ச்சிதே ‘ ஸதாம் அஸம்பவாயாகில - ஸத்வ - மூர்தயே பும்ஸாம் புன : பாரமஹம்ஸய ஆஸ்ரமே வ்யவஸ்திதானாம் அனும்ருக்ய - தாசுஷே மொழிபெயர்ப்பு புனித பக்தர்களை எல்லாத் துயரங்களிலிருந்தும் விடுவிப்பவரும் , பக்தரல்லாத அசுரர்களின் நாஸ்திக மனோபாவங்களின் வளர்ச்சியை அழிப்பவரும் , பரிபூரண வாழ்வையும் , உன்னத உருவையும் கொண்டவருமான அவருக்கு எனது பணிவான வணக்கங்களை மீண்டும் நான்...