மஹாஜனங்கள் யார் வழங்கியவர் : சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸ்வயம்பூர் நாரத: சம்பு: குமார: கபிலோ மனு: ப்ரஹ்லாதோ ஜனகோ பீஷ்மோ பலிர் வையாசகீர் வயம் த்வாதஸயிதே விஜானிமோ தர்மம் பகவதம் பத: குஹ்யம் விசுத்தம் துர்போதம் யம் ஞாத்வாம்ருதம் அஸ்னுதே பிரம்ம தேவர், நாரதர், சிவ பெருமான், நான்கு குமாரர்கள், பகவான் கபிலர் (தேவஹூதியின் மகன்), சுயம்புவ மனு, பிரகலாத மகாராஜன், ஜனக மகாராஜன், பாட்டனார் பீஷ்மர், பலி மகாராஜன், சுகதேவ கோஸ்வாமி மற்றும் நான் ஆகிய பன்னிருவரும் உண்மையான சமயக் கோட்பாட்டை அறிந்தவர்களாவோம். அன்பிற்குரிய சேவகர்களே, பாகவத - தர்மம் அல்லது பரமபுருஷரிடம் அன்பு கொண்டு அவரிடம் சரணாகதியடைதல் எனப்படும் இந்த உன்னதமான சமயக் கோட்பாடு, ஜட இயற்கைக் குணங்களால் கறைப்படுத்தப்படாததாகும். இது மிகவும் இரகசியமானதும், சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்வதற்குக் கடினமானதுமாகும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இதை ஒருவன் புரிந்து கொண்டுவிட்டால், அவன் உடனே முக்தியடைந்து பரமபதத்திற்கு, பகவானின் இரா...