Skip to main content

Posts

கங்கையில் நீராடினால் பாவம் போய்விடுமா?

கங்கையில் நீராடினால் பாவம் போய்விடுமா? வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 கைலாயத்தில் சிவபெருமானும் பார்வதிதேவியும் உரையாடிக் கொண்டிருந்த போது பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது அதை கைலைநாதனான சிவனிடம் கேட்க ஆரம்பித்தார். அதாவது, மக்கள் கங்கையில் நீராடினால் தங்களது பாவம் போய்விடும் என்று நீராடுகிறார்களே, அவர்களில் எல்லொரது பாவமும் போய்விடுமா? என்பது தான் அந்த கேள்வி. அதற்கு சிவபெருமானோ அதற்கான பதிலை ஒரு சிறு நாடகமாக நடத்தி காட்ட எண்ணி பார்வதி தேவி என்ன செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்படி சிவபெருமான் வயதான ரிஷி போலவும், பார்வதி தேவி ரிஷி பத்தினியாகவும் மாறினார்கள். கங்கையில் தீர்த்தமாடி வரும் வழியில் சிறு பள்ளம் தோன்றச் செய்து சிவபெருமான் அதில் விழ்ந்து தத்தளித்தபடியும், பார்வதி தேவி பள்ளத்தின் அருகே நின்று தனது கணவரை காப்பாற்ற வேண்டும் என்று கூக்குரலிட்டு கத்தியபடி இருந்தார். கங்கையில் குளித்து விட்டு வந்த பலர் பள்ளத்தில் கிடந்த சிவபெருமானை வெளியே தூக்க வந்தபோது பார்வதி தேவி தனது கணவர் ஒரு உத்தமமான  ரிஷி என்றும் அவரை பாவம் செய்தவர் தொட்டால் மறுகணமே சாம்பல...

ஏகாதசி அன்று நாம் ஏன் தானியங்கள் உண்ணக்கூடாது?

ஏகாதசி அன்று நாம் ஏன் தானியங்கள் உண்ணக்கூடாது? 🍁🍁🍁🍁🍁🍁🍁 பத்ம புராணம்: 🍁🍁🍁🍁🍁🍁 பூயோ பூயோ திர்த வாணி ச்ரயதாம் சயத ஜன  ந போக்தவ்யம் ந போக்தவ்யம் ஹரேர் தினே  "ஓ! மனிதர்களே! தயவு செய்து கேளுங்கள். நான் மீண்டும் மீண்டும் உறுதியோடு கூறுகிறேன், பகவான் ஹரிக்கு உகந்த நாட்களில் (ஏகாதசி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி) அன்று தயவு செய்து தானியங்கள் சாப்பிடாதீர்கள்.  யாரேனும் வற்புறுத்தினாலும் கூட, மறந்தும் ஒரு தானியத்தை சாப்பிட்டுவிடாதீர்கள்.  ஏன் ஏகாதசி அன்று தானியங்கள் சாப்பிடக்கூடாது என்று ப்ரஹன் நாரதிய புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது:   🍁🍁🍁🍁🍁🍁 யாணி காணி சபாபானி பிரம்மா ஹத்யாதி காணி சா  அண்ணம் அஸ்ரித்ய தியதந்தி ஸம்ப்ராப்தே ஹரி வாஸரே  "பிராமணரை கொன்ற பாவம் உட்பட, அணைத்து பாவங்களும் ஏகாதசி மற்றும் பகவான் ஹரிக்கு உகந்த நாட்கள் அன்று தானியங்களில் இருக்கும். யாரொருவர் இந்த நாட்களில் தானியங்களை உட்கொள்கிறாரோ, அவருக்குக்குள் இந்த பாவங்கள் போய்சேரும்.  ஹரி பக்தி விலாசம்: 🍁🍁🍁🍁🍁🍁 பிரமச்சாரி க்ரிஹஸ்தோ வா வானப்ரஸ்தோ அதாவ யதி  ஏகாதஸ்யாம் ஹி புத்தே க...

விஜய ஏகாதசி

விஜய  ஏகாதசி   🍁🍁🍁🍁🍁 ஒரு முறை யுதிஸ்டிர மன்னர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் . ஓ! கிருஷ்ணா, மாசி மாத (பிப்ரவரி / மார்ச்) தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி எனக்கு தயவுசெய்து விவரியுங்கள் என்று கேட்டார் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மன்னர் யுதிஷ்டிரிடம் ,  மன்னா, இந்த புனிதமான ஏகாதசியின் பெயர்  விஜய ஏகாதசி எனப்படும். இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளும் அழிக்கப்படும். ஒரு முறை மாமுனிவரான நாரதர் பகவான் பிரம்மா தேவரிடம் . ஓ! தேவர்களில் சிறந்தவரே, மாசி மாத (பிப்ரவரி/மார்ச்) தேய்பிறையில் deதோன்றக்கூடிய, விஜய ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவர் அடையும் பலனைப் பற்றி எனக்கு விளக்கி அருள வேண்டும்  என்று கேட்டார். பிரம்ம தேவர் பதிலளித்தார், ஓ! எனதருமை புத்திரனே, இந்த ஏகாதசி விரதம், மிகவும் பழமையானதும், தூய்மையானதும், மற்றும் எல்லா வித  பாவச் செயல்களை அழிக்கக் கூடியதும் ஆகும். இந்த விஜயா ஏகாதசி ஒருவருக்கு அரிய பலனை கொடுக்கக் கூடியதாகும். அதன் பெயரிற்கேற்ப  ஒருவருக்கு வெற்றியை கொடுக்கிறது. ஸ்ரீராமச்சந்திரர், தன் தந்தையின் கட்டளையை நிறைவேற்றும்...

பீஷ்மர்

  பீஷ்மர் வழங்கியவர்: திருமதி கீதா கோவிந்த தாஸி 🍁🍁🍁🍁🍁🍁🍁 பீஷ்மர் பரத குலத்தோரில் மாபெரும் வீரர். தன் வாழ்நாள் முழுவதும் பிரம்மசரியத்தைக் கடைபிடித்த வைராக்கிய சீலர், எட்டு வசுக்களில் சிறந்தவர். ஹஸ்தினாபுர அரசவையில் சிறப்பான முறையில் நிர்வாகம் செய்தவர். மஹாபாரதம் கேட்ட படித்த அனைவருக்கும் இவை தெரிந்த விஷயங்களே. ஆனால் அவர் பன்னிரண்டு மகாஜனங்களில் (மிகவுயர்ந்த பக்தர்களில்) ஒருவர் என்பதும், வியாசர் போன்ற மாமுனிவரிலும் மேன்மையானவர் என்பதும் பலர் அறியாத உண்மை. அவருக்கும் பகவானுக்கும் உள்ள உறவைப் பற்றி விவரமாகக் காணலாம். பீஷ்மருக்கும் பகவானுக்கும் உள்ள உறவுமுறை 🍁🍁🍁🍁🍁🍁 பொதுவாக, பக்தர்களுக்கும் பகவானுக்கும் ஐந்து வகையான முக்கிய உறவு முறைகள் உள்ளன. அவை ஸாந்த பக்தி (மிதமான பக்தி), தாஸ்ய பக்தி (தொண்டு செய்யும் பக்தி), ஸக்ய பக்தி (நட்பு ரீதியான பக்தி), வாத்ஸல்ய பக்தி (பெற்றோர் முறையிலான பக்தி), மாதுர்ய பக்தி (சிருங்கார பக்தி). இந்த ஐந்து உறவுகளில், பீஷ்மர் தொண்டு புரியும் பக்தராக பகவானுடன் உறவு கொண்டிருந்தார். ஐந்து வகையான பக்தியை வெளிப்படுத்தும் பக்தர்கள் அவ்வப்போது அச்சம், வீரம், ந...

பஞ்ச-தத்துவ வழிபாடு

 

பஞ்ச-தத்துவ வழிபாடு

 

பஞ்ச-தத்துவ வழிபாடு

 

பஞ்ச-தத்துவ வழிபாடு

  பஞ்ச-தத்துவ வழிபாடு 🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலி யுகத்தில் ஸங்கீர்த்தன இயக்கத்தைப் பரப்புவார் என்றும் அவரை அவருடைய சகாக்களுடன் இணைந்து வழிபடுபவர்கள் புத்திசாலிகள் என்றும் ஸ்ரீமத் பாகவதம் (11.5.32) கூறுகிறது. அதன்படி, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைப் பின்பற்றும் கௌடீய வைஷ்ணவர்கள், அவரை அவருடைய முக்கிய சகாக்களான ஸ்ரீ நித்யானந்த பிரபு, ஸ்ரீ அத்வைத பிரபு, ஸ்ரீ கதாதர பண்டிதர், ஸ்ரீவாஸ தாகூர் மற்றும் இதர பக்தர்களுடன் இணைந்து பஞ்ச-தத்துவமாக (ஐந்து தத்துவங்களாக) வழிபடுகின்றனர். இந்த பஞ்ச-தத்துவ வழிபாடு கலி யுகத்திற்கு மிகவும் உகந்ததாகும். இது குறித்து ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்திலிருந்து சில மேற்கோள்கள் இங்கே பகவத் தரிசன வாசகர்களுக்காக வழங்கப்படுகிறது. அபராதங்களைப் போக்கும் பஞ்ச தத்துவ வழிபாடு 🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எப்போதும் தனது முக்கிய அம்சமான ஸ்ரீ நித்யானந்த பிரபு, தனது அவதாரமான ஸ்ரீ அத்வைத பிரபு, தனது அந்தரங்க சக்தியான ஸ்ரீ கதாதர பிரபு, தனது நடுத்தர சக்தியான ஸ்ரீவாஸ பிரபு ஆகியோரால் சூழப்பட்டுள்ளார். அவர்களின் மத்தியில் அவர் பரம புருஷ பகவானாக உள்ளார். ஸ்ரீ சைதன்ய மஹாபி...

ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி பிரணதி

 

ஸ்ரீல பக்தி சித்தாந்த ஸரஸ்வதி தாகூர்

  ஸ்ரீல பக்தி சித்தாந்த ஸரஸ்வதி தாகூர்   வழங்கியவர்: திருமதி. கீத கோவிந்த தாஸி 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 சித்தாந்தத்திற்காகப் போராடிய பக்திசித்தாந்தர் தோற்றம் 🍁🍁🍁🍁🍁 1874ல் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி அவர்கள் ஒரிசா மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமான ஜகந்நாத பூரியில் மாபெரும் வைஷ்ணவ ரான ஸ்ரீல பக்திவினோத தாகூருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். பிமல பிரஸாத் என்று பெயரிடப்பட்ட அவர், பிற்காலத்தில் மிகுந்த அறிவாளியாகவும் பகவானின் புகழை உலகெங்கும் பரப்பும் உயர்ந்த போதகராகவும் திகழ் வார் என ஜோதிடர்கள் கூறினர். அதுமட்டுமின்றி, ஒரு மஹா புருஷருக்கான அனைத்து இலட்சணங்களும் அடங்கிய வேறொரு ஜாதகத்தை அதுவரை பார்த்ததேயில்லை என்றும் அவர்கள் கூறினர். ஜகந்நாதரின் அருள் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பிமல பிரஸாத் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது வருடந் தோறும் கொண்டாடப்படும் ஜகந்நாதரின் ரதயாத்திரை திருவிழா வந்தது. ஸ்ரீல பக்திவினோத தாகூரின் வீட்டின் முன் வந்த ரதம், உடனே நின்று விட்டது. பக்தர்கள் எவ்வளவோ முயன்றும் ரதம் நகரவில்லை. பகவான் ஜகந்நாதர் ஸ்ரீல பக்திவினோத தாகூரின் வீட்டின் முன்பு நிற்க விரு...