கடவுளை மறந்தால் முழுமுதற் கடவுளை மறந்தால் என்ன நடக்கும் என்பதை விளக்கும் சிறந்த கதை ஒன்று உள்ளது. ஒரு சமயம், ஓர் எலிக்கு ஒரு பூனையினால் தொல்லை ஏற்பட்டது. ஆகவே, அந்த எலி இறைத்தன்மையை உணரச் செய்யும் ஆற்றல் படைத்த ஒரு சாதுவிடம் சென்று, “அன்புள்ள ஐயா, நான் மிகுந்த கவலையில் உள்ளேன்,” என்று கூறியது. “என்ன கஷ்டம்?” எலி கூறியது, “என்னை ஒரு பூனை எப்போதும் துரத்துவதால், எனக்கு மன அமைதி இல்லை.” “என்ன வேண்டும் உனக்கு?” “தயவுசெய்து என்னை பூனையாக மாற்றிவிடுங்கள்.” “சரி. பூனையாக மாறுவாயாக!” சாதுவின் வாக்கினால் அந்த எலி உடனடியாக பூனையாக மாறியது. ஆயினும், சில நாள்களுக்குப் பிறகு அந்தப் பூனை சாதுவிடம் வந்து கூறியது, “அன்புள்ள ஐயா, மீண்டும் நான் கவலையில் உள்ளேன்.” “என்ன கவலை?” “நாய்கள் என்னைத் துரத்துகின்றன.” “என்ன வேண்டும் உனக்கு?” “என்னை ஒரு நாயாக மாற்றிவிடுங்கள்.” “சரி. நாயாக மாறுவாயாக!” பூனை நாயாக மாறியது. சில நாள்களுக்குப் பிறகு அந்த நாய் மீண்டும் அவரிடம் வந்து கூறியது, “மீண்டும் நான் கவலையில் உள்ளேன்.” “என்ன கவலை?” “நரிகள் என்னைத் துரத்துகின்றன.” “என்ன வேண்டும் உனக்கு?” “என்னை நரியாக மாற்று...