நரசிம்ம அவதாரம் ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் காண்டம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பாகம் 2 இரண்யகசிபு சாகாவரம் பெறும்திட்டம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இரண்யகசிபு மரணமற்றவனாக ஆக விரும்பினான் . யாராலும் ஐயிக்கப்பட முடியாதவனாகவும் , முதுமையாலும் நோயினாலும் பீடிக்கப் படாதவனாகவும் , எதிரியற்றவனாகவும் ஆக விரும்பினான் . இவ்வாறாக அவன் இந்த முழு பிரபஞ்சத்திற்கும் சக்ரவர்த்தியாக ஆக விரும்பினான் . இந்த விருப்பத்துடன் மந்தரமலைப் பள்ளத்தாக்கில் பிரவேசித்த அவன் , ஒருவித கடுந்தவத்தையும் , தியானத்தையும் செய்யத் துவங்கினான் . இரண்யகசிபு இத்தவத்தில் ஈடபட்டிருப்பதைக் கண்ட தேவர்கள் அவரவர் இல்லங்களுக்குத் திரும்பினர் . ஆனால் இரண்யகசிபு இவ்வாறு ஈடுபட்டிருந்த பொழுது , ஒருவித நெருப்பு ஜீவாலை அவனது தலையிலிருந்து வெளிப்பட்டு முழு பிரபஞ்சத்தையும் , அதன் வாசிகளையும் , பறவைகளையும் , மிருகங்களையும் மற்றும் தேவர்களையும் தொந்தரவு செய்தது . மேலுலகங்களிலும் , கீழுலங்களிலும் வாழ முடியாதபடி வெட்பம் மிகுந்துவிட...