Skip to main content

Posts

நாராயண - கவசம்

“நாராயண - கவசம்” ஸ்ரீமத் பாகவதம்  / ஆறாம் காண்டம் பதம் 12 ஓம் ஹரிர் விதத்யான் மம ஸர்வ-ரக்ஷாம் ன்யஸ்தாங்ரி-பத்ம: பதகேந்ர-ப்ரூஷ்டே தராரி-சர்மாஸி-கதேஷு-ாப- பாசா ததானோ ‘ஷட்-குணோ ‘ஷ்ட-பாஹு: மொழிபெயர்ப்பு தமது கருட வாகனத்தின் மேல் தாமரைப் பாதங்களை வைத்தபடி அமர்ந்திருப்பவரான பரமபுருஷர், சங்கு, சக்கரம், கேடயம், கத்தி, கதை, அம்புகள், வில், பாசம் (கயிறு) ஆகிய எட்டு ஆயுதங்களைத் தமது கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறார். அந்த பரமபுருஷர் அவரது எட்டுக் கரங்களினால் எப்பொழுதும் என்னைப் பாதுகாப்பாராக. அவர் அணிமா, லகிமா முதலான அஷ்ட சித்திகளை முழுமையாகப் பெற்றவர் என்பதால் சர்வ சக்தி படைத்தவராவார். பதம் 13 ஜலேஷு மாம் ரக்ஷது மத்ஸ்ய-மூர்த்திர் யாதோ-கணேப்யோ வருணஸ்ய பாசாத் ஸ்தாலேஷு மாயாவடு-வாமனோ ‘வ்யாத் த்ரிவிக்ரம: கே ‘வது விஸ்வரூப: மொழிபெயர்ப்பு மிகப் பெரிய ஒரு மீனின் உடலை ஏற்பவரான பகவான், வருணதேவனின் சகாக்களாகவுள்ள, கொடிய நீரினங்களிடம் இருந்து நீரில் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாராக. பகவான் தமது மாயா சக்தியை விரிவடையச் செய்து குள்ள வாமணரின் உருவத்தை ஏற்றார். அந்த வாமனர் நிலத்தில் என்னைக் காப்பாராக. பகவானின் ப...

ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் ராதாராணி

🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தில் ‘ஹரே’ என்னும் சொல் 8 முறை வருகிறது. ‘ஹரா’ என்றால் ‘ராதா’ என்று பொருள். ‘ராதா’ என்னும் சொல், விளிச்சொல்லாக வரும்போது ‘ராதே’ என்று மாறுவதைப் போலவே, ‘ஹரா’ என்னும் சொல் ‘ஹரே’ என்று மாறி வருவதாக ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார். நாம் இந்த மஹா மந்திரத்தை பகவத் சிந்தனையுடன் வாயினால் உச்சரித்து காதால் நன்கு கேட்க வேண்டும். ‘ஹரே’ என்று சொல்லும்போது அச்சொல்லின் அலைகள் பரவ, ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் உச்சரிக்கப்படுவதை எண்ணி பகவான் கிருஷ்ணர் மகிழ்கிறார். அதே சமயம் ‘கிருஷ்ண’ என்று சொல்லும்போது, பகவான் கிருஷ்ணரின் பெயர் உச்சரிக்கப்படுவதைக் கேட்டு ராதாராணி மகிழ்ச்சியடைகிறார். இந்த உணர்வை மனத்தில் நிறுத்தி நாம் ஜெபம் செய்ய வேண்டும். ராதாராணியானவர் நம்மீது கருணை வைத்து கோலோக விருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்வாறேயானால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதனைக் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ர...

இரன்யகசிபுவின் கேள்விகளுக்கு பிரகலாதனின் பதில்கள்

  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁  இரண்யகசிபு  :-  மூடனே பிரகலாதா, நான் கோபப்படும்பொழுது மூவுலகங்களும் அவற்றின் அதிபதிகளும் நடுங்குகின்றனர் என்பதை நீ அறிவாய். யாருடைய பலத்தினால் அயோக்கியனான நீ, பயமற்றவனாகி என் அதிகாரத்தையும் மீறும் அளவிற்கு இவ்வளவு புத்தியற்றவன் ஆனாய்? பிரகலாத மகாராஜன் கூறினார்:- அரசே, என்னுடைய பலத்திற்கு மூலம் எதுவோ, அதுவே தங்களுடைய பலத்திற்கும் மூலமாகும். உண்மையில், எல்லா வகையான பலத்திற்கும் ஆதிமூலம் ஒன்றுதான். அவரே எனக்கு மட்டுமல்லாமல் தங்களுக்கும், மற்றுமுள்ள எல்லா பலசாலிகளுக்கும் ஒரே பலமாக விளங்குகிறார். அவரன்றி எவராலும் எந்த சக்தியையும் பெற முடியாது. பிரம்மதேவர் உட்பட, அசைவன, அசையாதன. உயர்ந்தவர், தாழ்ந்தவர் ஆகிய அனைவருமே பரமபுருஷரின் பலத்தினால்தான் ஆளப்படுகின்றனர். எவர் பரம ஆளுனராகவும், கால சொரூபமாகவும் இருக்கிறாரோ, அந்த பரமபுருஷரே இந்திரிய சக்தியாவும், மனோபலமாகவும், சரீர பலமாகவும், புலன்களின் உயிர்ச்சக்தியாகவும் இருக்கிறார். அவருடைய செல்வாக்கு எல்லையற்றதாகும். அவரே அனைத்து ஜீவராசிகளிலும் மிகச் சிறந்தவரும், ஜட இயற்கையின் முக்குணங்களை ஆள்பவருமாவார். அவர் தமது ...

பகவான் நரசிம்மர் அசுர ராஜனைவதம் செய்தல்

  நரசிம்ம அவதாரம்   ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் காண்டம்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   பாகம் 7   பகவான் நரசிம்மர் அசுர ராஜனைவதம் செய்தல்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁     அசுர குமாரர்கள் அனைவரும் பிரகலாத மகாராஜனின் உபதேசங்களைப் பின்பற்றி பரமபுருஷராகிய பகவான் விஷ்ணுவிடம் பற்றுக் கொண்டவர்கள் ஆயினர் . இப்பற்றுதல் தீர்மானமானதாக மாறியபொழுது , அவர்களுடைய ஆசிரியர்களான சண்டனும் , அமர்க்கனும் , அச்சிறுவர்கள் பகவானிடம் அதிக பக்தியுடையவர்களாக மாறி விடுவார்களோ என்று மிகவும் அஞ்சினர் . அவர்கள் உதவியற்ற இந்நிலையில் இரண்யகசிபுவை அணுகி , பிரகலாதருடைய பிரச்சாரத்தின் விளைவைப் பற்றி அவனிடம் விவரமாகக் கூறினார்கள் . இதைக் கேட்டதும் , இரண்யகசிபு தன் மகனான பிரகலாதரைக் கொன்றுவிட முடிவு செய்தான் . இரண்யகசிபு கடுங்கோபமடைந்ததால் , பிரகலாத மகாராஜன் அவனை சமாதானப்படுத்துவதற்காக அவனுடைய பாதங்களில் விழுந்து பல விஷயங்களைக் கூறினார் . ஆனால் இரண்யகசிபுவை அவரால் சமாதனப்படுத்த இயலவில்லை . ஓர் அசுரனுக்கு இலக...