நரசிம்ம அவதாரம் ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் ஏழாம் காண்டம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பாகம் 8 பிரகலாதர் பகவான் நரசிம்மரைசாந்தப்படுத்துதல் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இரண்யகசிபுவைக் கொன்ற பிறகும் பகவானுடைய கோபம் தனியவில்லை . பிரம்மா முதலான தேவர்களாலும் அவரை சாந்தப்படுத்த இயலவில்லை . ஸ்ரீதேவியும் , நாராயணரின் இணையிரியா நாயகியுமான தாய் லக்ஷ்மிதேவிகூட , பகவான் நரசிம்மதேவர் முன் வரத் துணியவில்லை . பிறகு பிரம்மதேவர் , பகவானை அணுகி அவரைச் சாந்தப்படுத்தும்படி பிரகலாத மகாராஜனை கேட்டுக் கொண்டார் . தமது தலைவராகிய பகவான் நரசிம்மதேவர் தன்னிடம் கொண்டுள்ள பாசத்தில் முழு நம்பிக்கைக் கொண்டிருந்த பிரகலாதர் சிறிதும் அச்சப்படவில்லை . அவர் மௌனமாக பகவானுடைய தாமரைப் பாதங்களை அணுகி , மரியாதையுடன் அவரை வணங்கினார் . பகவான் நரசிம்மர் பிரகலாதரிடம் பேரன்பு கொண்டிருந்ததால் , அவர் தமது கையைப் பிரகலாதரின் தலைமேல் வைத்து அவரை ஆசீர்வதித்தார் . பகவானுடைய நேரடியான ஸ்பரி...