Skip to main content

Posts

தூய பக்தியின் பிரச்சாரகர் தேவரிஷி நாரதர்

  தூய பக்தியின் பிரச்சாரகர் தேவரிஷி நாரதர் வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 யாரேனும் ஒருவர் இரு தரப்பினரிடையே சண்டை மூட்டிவிட்டால், அவரை “நாரதர்” என்று அழைத்து கிண்டல் செய்வது இந்தியாவில் வழக்கம். நாரதர் என்றவுடன் பலரும் கூறுவது: “ஓ, நாரதரா, கலகம் மூட்டுபவர்தானே.” ஆனால் அவர்கள் அனைவரும் நாரதரை தவறாக புரிந்து வைத்துள்ளனர். மாபெரும் பக்தரும் தெய்வீக ரிஷியுமான நாரதரை ஒரு கோமாளியாக சித்தரித்து பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளதே இதற்கு காரணமாகும். புராணங்களையும் இதிகாசங்களையும் முறையாகப் படிப்பவர்கள் யாரும் நாரதரை கேலிக்கு உரிய நபராக கனவிலும் நினைக்க மாட்டார்கள். புராணக் கதைகளை திரைப்படமாக வெளியிட்டு பணம் சம்பாதிக்க விரும்பும் மனசாட்சியற்ற தயாரிப்பாளர்கள் தங்களுடைய திரைப்படங்களில் நவரசங்களும் வேண்டும் என்ற எண்ணத்தில், யாரேனும் ஒருவரை நகைச்சுவை கதாபாத்திரமாக காட்ட விரும்பி, ஏதோ காரணத்தினால் எங்கேயோ ஆரம்பிக்கப்பட்டு, நாரதர் நகைச்சுவை கதாபாத்திரமாக ஆகிவிட்டார். தெய்வீக ரிஷியான நாரதர் யார் என்பதையும் அவரது பெருமைகள் யாவை என்பதையும் தெரிந்து கொள்ளாமல், மக்கள் அறியாமையில் இரு...

ஶ்ரீ கிருஷ்ணரின் கவர்ச்சி

 

லீலா புருஷோத்தமன் ஶ்ரீ கிருஷ்ணர்

 

அர்ச்சா விக்ரகம்

 

கிருஷ்ணரின் வசீகரம்

 

பிரகலாதர் பகவான் நரசிம்மரைசாந்தப்படுத்துதல்

  நரசிம்ம   அவதாரம்   ஆதாரம்  :-  ஶ்ரீமத்   பாகவதம்   ஏழாம்   காண்டம்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   பாகம்  8   பிரகலாதர் பகவான் நரசிம்மரைசாந்தப்படுத்துதல்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   இரண்யகசிபுவைக் கொன்ற பிறகும் பகவானுடைய கோபம் தனியவில்லை . பிரம்மா முதலான தேவர்களாலும் அவரை சாந்தப்படுத்த இயலவில்லை . ஸ்ரீதேவியும் , நாராயணரின் இணையிரியா நாயகியுமான தாய் லக்ஷ்மிதேவிகூட , பகவான் நரசிம்மதேவர் முன் வரத் துணியவில்லை . பிறகு பிரம்மதேவர் , பகவானை அணுகி அவரைச் சாந்தப்படுத்தும்படி பிரகலாத மகாராஜனை கேட்டுக் கொண்டார் . தமது தலைவராகிய பகவான் நரசிம்மதேவர் தன்னிடம் கொண்டுள்ள பாசத்தில் முழு நம்பிக்கைக் கொண்டிருந்த பிரகலாதர் சிறிதும் அச்சப்படவில்லை . அவர் மௌனமாக பகவானுடைய தாமரைப் பாதங்களை அணுகி , மரியாதையுடன் அவரை வணங்கினார் . பகவான் நரசிம்மர் பிரகலாதரிடம் பேரன்பு கொண்டிருந்ததால் , அவர் தமது கையைப் பிரகலாதரின் தலைமேல் வைத்து அவரை ஆசீர்வதித்தார் . பகவானுடைய நேரடியான ஸ்பரி...