Skip to main content

Posts

ஶ்ரீநிவாச ஆச்சாரியர்

  ஶ்ரீநிவாச ஆச்சாரியர் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 வாஞ்சா கல்பதருப யஷ் ச க்ருபா ஸிந்துப்ய  ஏவ ச    பதிதானாம் பாவனேப்யோ வைஷ்ணவேப்யோ  நமோ நம: நிலையிழந்த ஆத்மாக்களிடம் கருணை மிக்கவர்களும், கற்பக விருட்சங்களைப் போன்று எல்லோரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்பவகர்களுமான பகவானின் வைஷ்ணவ பக்தர்கள் அனைவருக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.  கதாதர பட்டாச்சாரியர் ஸ்ரீனிவாச ஆச்சாரியாரின் தந்தை 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆  கதாதர பட்டாச்சாரியாரரும் அவரது மனைவி லட்சுமி ப்ரியாவும் "நிமாய் பண்டிட்"  - பகவான் ஸ்ரீசைதன்ய மஹாபிரபு வின் மிகச் சிறந்த பக்தர்கள் ஆவர்.  ஒருமுறை கதாதர பட்டாச்சாரியார் பகவான் சைதன்யரை தரிசனம் செய்வதற்காக அவரது கிராமத்தை விட்டு மாயாப்பூருக்குச் செல்ல முடிவு செய்தார். அவ்வாறு செல்கையில் தனது நெருங்கிய நண்பர் கேஷவ பாரதி  வசிக்கும் கட்வா என்ற சிறிய கிராமத்திற்கு சென்று பின் தன் பயணத்தை தொடரலாம் என்று திட்டமிட்டிருந்தார்.  அப்போது அவர் செல்லும் அதே வழியில் ஆயிரக்கணக்கான மக்கள் ச...

ஸ்ரீவாஸ பண்டிதர்

  ஸ்ரீவாஸ பண்டிதர் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆 ஸ்ரீவாஸ-பண்டிதோ தீமான் ய: புரா நாரதோ முனி:  பர்வதாக்யோ முனி-வரோ ய ஆஷீன் நாரத-ப்ரிய: ஸ்ரீ-ராம-பண்டித: ஸ்ரீமான் தத்-கனிஷ்ட-ஸஹோதர: நாம்னாம்பிகா வ்ரஜே தாத்ரீ ஸ்தன்ய-தாத்ரீ ஷ்திதா புரா சைவியம் மாலினீ நாம்னீ ஸ்ரீவாஸ-க்ருஹினீ மதா கிருஷ்ண லீலையின் நாரதமுனிவரே கெளர லீலையின் ஸ்ரீவாஸ பண்டிதராவார். நாரத முனிவரின் நண்பரான பர்வத முனிவரே ஸ்ரீவாஸ பண்டிதரின் இளைய சகோதரர் ஸ்ரீ ராம பண்டிதராவார். ஸ்ரீவாஸ பண்டிதரின் மனைவி மாலினி தேவி, விரஜத்தில் கிருஷ்ணருக்கு பாலூட்டும் செவிலித்தாயான அம்பிகா ஆவார். (கெளர- கணோதேஷ- தீபிகா 90)  பஞ்ச தத்துவம் 🍁🍁🍁🍁🍁🍁 பஞ்சதத்வாத்மகம் க்ருஷ்ணம்  பக்தரூப ஸ்வரூபகம்  பக்தாவதாரம் பக்தாக்யம்  நமாமி பக்தஷக்திகம் பக்த ரூபம், பக்த ஸ்வரூபம், பக்த அவதாரம், பக்தன் மற்றும் பக்த சக்தி, எனப்படும் தமது தோற்றங்களிலிருந்து வேறுபடாதவரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணருக்கு நான் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.  (சைதன்ய சரிதாம்ருதம் 1.1.14) ...

பாண்டவ நிர்ஜல ஏகாதசி

  மே/ ஜுன் மாதங்களில், வளர்பிறையில் தோன்றக்கூடிய நிர்ஜல ஏகாதசியின் விவரங்களை, பிரம்ம - வைவர்த்த புராணத்தில் வியாசதேவருக்கும், பீமசேனருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.  ஒரு முறை யுதிஸ்டிரரின் சகோதரனான பீமசேனர், பெருமுனிவரான வியாசதேவரிடம் கேட்டார். ஓ! கற்றறிந்த மற்றும் வணக்கத்திற்குரிய பெரியவரே! என் தாய் குந்திதேவி, எனது சகோதரர்களான யுதிஸ்டிரர், அர்ஜுனன், நகுலா, சகாதேவா, மற்றும் திரௌபதி ஆகியோர் ஏகாதசி நாளன்று எதையும் உண்ணுவதில்லை. அவர்கள் என்னையும் ஏகாதசியன்று விரதம் மேற்கொள்ளுமாறு வற்புறுத்தவர். ஏகாதசி விரதம் வேத சாஸ்திரங்களின் கட்டளையாக இருப்பினும் என்னால் பசியை பொறுத்துக் கொள்ள இயலாததால் என்னால் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடியாது என்று அவர்களுக்கு கூறுவேன். ஆனால் என்னால் இயன்றவரை தானங்கள் செய்வேன். விதிமுறைகளுக்கேற்ப பகவான் கேசவனை வணங்குவேன். ஆனால் உண்ணாவிரதம் மட்டும் என்னால் மேற்கொள்ள முடியாது. ஆகையால், உண்ணாவிரதம் இருக்காமல் எவ்வாறு ஏகாதசியின் பலனை அடைவது என்பதை தயவு செய்து எனக்குக் கூறுங்கள். இவ்வார்த்தைகளைக் கேட்ட வியாசதேவர் கூறினார். ஓ! பீமா நீ நரகலோகத்தைக் த...

கங்காமாதா கோஸ்வாமினி

  கங்காமாதா கோஸ்வாமினி இன்றைய வங்காள நாட்டில் (தற்போதைய பங்களாதேஷ்) ராஜ்ஷாஹி என்ற மாநிலத்தில்  உள்ள புந்தியாவின்  அரசர் நரேஷ் நாராயணாரின் ஒரே மகளாவார்.  அவருடைய குழந்தை பருவத்தில் அவர் சச்சி என்று அழைக்கப்பட்டார். தனது இளவயது முதலே பகவத் விசயங்களில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். மேலும் குறுகிய காலத்திற்குள்ளேயே, வியாகரணங்கள், காவியங்கள் மற்றும் பல சாஸ்திரங்கள் குறித்து உரையாட ஆரம்பித்தார். சச்சி வளர்ந்ததும் அவரது அழகும், கருணையும் அனைவரையும் கவர்ந்தது. ஆனால் அவருடைய மனம் முழுமையாக மதனகோபாலனிடம் ( பகவான் ஶ்ரீ கிருஷ்ணரிடம்)  ஈர்க்கப்பட்டிருந்தது. அவருடைய பெற்றோர்கள் அவருக்கு திருமண ஏற்பாடு செய்வதை அறிந்த அவர், தான் பெளதிக வாழ்க்கையில் ஈடுபட விரும்பவில்லை என்றும் தான் முழுமுதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள விரும்புவதாகவும் உறுதியாக கூறினார். சச்சியின் இந்த முடிவால் அவரின் பெற்றோர்கள் மிகவும் கலக்கம் அடைந்தனர்.  சிறிது காலத்திற்குப் பிறகு அரசனும் அரசியும் உடல் நலக் குறைவினால்  மரணம் அடைந்தனர். அவர்களுடைய மறைவிற்கு பிறகு அரச...