ஶ்ரீநிவாச ஆச்சாரியர் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 வாஞ்சா கல்பதருப யஷ் ச க்ருபா ஸிந்துப்ய ஏவ ச பதிதானாம் பாவனேப்யோ வைஷ்ணவேப்யோ நமோ நம: நிலையிழந்த ஆத்மாக்களிடம் கருணை மிக்கவர்களும், கற்பக விருட்சங்களைப் போன்று எல்லோரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்பவகர்களுமான பகவானின் வைஷ்ணவ பக்தர்கள் அனைவருக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள். கதாதர பட்டாச்சாரியர் ஸ்ரீனிவாச ஆச்சாரியாரின் தந்தை 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 கதாதர பட்டாச்சாரியாரரும் அவரது மனைவி லட்சுமி ப்ரியாவும் "நிமாய் பண்டிட்" - பகவான் ஸ்ரீசைதன்ய மஹாபிரபு வின் மிகச் சிறந்த பக்தர்கள் ஆவர். ஒருமுறை கதாதர பட்டாச்சாரியார் பகவான் சைதன்யரை தரிசனம் செய்வதற்காக அவரது கிராமத்தை விட்டு மாயாப்பூருக்குச் செல்ல முடிவு செய்தார். அவ்வாறு செல்கையில் தனது நெருங்கிய நண்பர் கேஷவ பாரதி வசிக்கும் கட்வா என்ற சிறிய கிராமத்திற்கு சென்று பின் தன் பயணத்தை தொடரலாம் என்று திட்டமிட்டிருந்தார். அப்போது அவர் செல்லும் அதே வழியில் ஆயிரக்கணக்கான மக்கள் ச...