யசோமதி நந்தன ப்ரஜ பரோ நாகர ஸ்ரீ நாம கீர்த்தனம் 🔆🔆🔆🔆 யசோமதி நந்தன ப்ரஜ பரோ நாகர கோகுல ரஞ்சன கான கோபிபராண தன மதன மனோஹர காலிய தமன விதான அமல ஹரிநாம் அமிய விலாசா, விபின புரந்தர நவீன நாகர போர பம்சிவதன சுவாசா ப்ரஜ-ஜன-பாலன அசுர-குல-நாஷன நந்த கோதன ராகோ வாலா கோவிந்த மாதவ நவநீத தாஸ்கர சுந்தர நந்த கோபால யாமுனா தடசர கோபிவசனஹர ராஸ ரஸிக கிருபாமோய ஸ்ரீராதா வல்லப ப்ருந்தாவன நடபர பகதி விநோதாஸ்ரய பகவான் க்ருஷ்ணர் யசோதையின் அருமைப்புதல்வர், விரஜவாசிகளின் உன்னத திவ்ய காதலன், கோகுலத்தின் ஒளிவிளக்கு, கோபிகளின் உயிர்செல்வம், மன்மதனின் மனத்தையும் அவர் கவருகின்றவர். காலியனெனும் பாம்பைத் தண்டித்தவர். அப்பழுக்கற்ற துய பகவான் ஹரியின் புனித நாமங்கள் இனிமை நிறைந்தவை, அமிர்தமயமான லீலைகள் நிறைந்தவை, க்ருஷ்ணர் விரஜ மண்டலத்திலுள்ள பன்னிரு காடுகளுக்கு தலைவன். எப்போதும் இளமையானவர், காதலர்களுள் சிறந்தவர். புல்லாங் குழலை ஊதிக்கொண்டிருப்பவர் மிக அழகிய ஆடைகளை உடையவர்.. விரஜவாசிகளின் காவலன் பல்வேறு அசுர குலங்களை அழிப்பவர். நந்த மஹாராஜாவின் ப...