உபாக்யானே உபதேசம் ( அருளியவர் :- ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி ) மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 முட்டாள் தேனீயும் , தேனும் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஒரு முறை ஒரு பெரிய தேனீ, கண்ணாடி குடுவையில் வைத்திருந்த தேனை பார்த்தது. அந்த தேனை ருசிக்க வேண்டும் என்று எண்ணியது. தேன் குடுவைக்குள் இருப்பதை உணராத தேனீ, வெகு நேரம் அந்த குடுவையை ருசித்துக்கொண்டிருந்தது. தேனை தொட்டு கூட பார்க்காத தேனீ, சிறிது நேரம் கழித்து, தேனை சுவைத்து விட்டதாக நினைத்து தன்னை தானே ஏமாற்றிக்கொண்டது. நீதி: பௌதிகவாதிகள் மற்றும் பெயரளவு வைஷ்ணவர்கள், பக்தியின் சுவையை உணர்ந்து விட்டதாக நினைக்கின்றனர். ஆனால் பக்தியின் ஆரம்பத்தை கூட அவர்கள் ஆராய்ந்து கண்டுபிடிக்காவில்லை. பக்தியின் ஆரம்பம் பகவான் கிருஷ்ணர் என்பது அவர்களுக்கு தெரியாது. இந்த காலத்தில் மக்கள் பலர், சண்டிதாஸர் மற்றும் வித்யாபதி போன்ற பக்தர்களின் கீர்த்தனைகளை கேட்பதாலும் அவர்கள் பகவானின் நாமத்தை கூறுவதை கேட்பதாலும் பக்தி பரவசத்தை அடைந்து விட்டதாக எண்ணுகின்றனர். ஆனால் அவர்கள் பகவான் கிருஷ்ணரின் லீலைகளி...