Skip to main content

Posts

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி

    வழங்கியவர்: திருமதி. கிருஷ்ண காமினி தேவி தாஸி மிக உயர்ந்ததும் தொன்மை மிக்கதுமான வைஷ்ணவ தர்மம், ஆழமான பக்தி உணர்வுகள் மற்றும் நுணுக்கமான விளக்கங்களுடன் தெய்வீக மணங் கமழும் பொலிவு பெற்றதாகும். தனக்கு வேண்டியவற்றை எல்லாம் பகவான் பார்த்துக் கொள்வார் என்பதை உணர்ந்து, அவரது பாத கமலங்களுக்குத் தொண்டு புரிவதே தமது தொழில் என்று வாழ்வதே சரணாகதி எனப்படும் உயர்ந்த தத்துவமாகும். இதை நமக்குக் கற்றுக் கொடுப்பதற்காக இம்மண்ணுலகில் தோன்றிய பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒன்பதாவது ஆழ்வாராக ஆண்டாள் அவதரித்தாள். ஆண்டாளின் பெருமையை இங்கு சற்று பார்ப்போம். ஆண்டாளின் அவதார நோக்கம் லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ருஷிகேஷ: என்று உபநிஷத் சொல்கின்றது. அதாவது, பகவானின் ஒவ்வொரு அவதாரத்தின்போதும் அவருடைய பத்தினிகளும் உடன் அவதரிக்கின்றனர். பகவானின் துணைவியர் மூவர்–திருமகள், மண்மகள், ஆயர் மடமகள். திருமகள் என்பது லக்ஷ்மியையும், மண்மகள் என்பது பூமிப் பிராட்டியையும், ஆயர் மடமகள் என்பது நீளா தேவியையும் குறிக்கும். இரண்யாக்ஷன் என்ற அசுரன் பூமிப் பிராட்டியை சமுத்திரத்தினுள் கொண்டு சென்று மறைத்து வைத்தான். அப்போது பெருமாள் வராஹ அவதார...

மேல்கோட்டை

  ஸ்ரீபாத இராமானுஜாசாரியருக்கு பிரியமான ஸ்தலம் வழங்கியவர்: அத்புத ஹரி தாஸ் தென்னிந்தியாவின் மலைப் பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில், பாரத பாரம்பரியத்தின் மிகமுக்கியமான ஆச்சாரியர்களில் ஒருவரான இராமானுஜர் உட்பட பலருக்கும் அடைக்கலம் கொடுத்த திருத்தலம். மேல்கோட்டை, மைசூரிலிருந்து சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீபாத இராமானுஜாசாரியரைப் பின்பற்றும் ஸ்ரீ வைஷ்ணவர்களால், உலகின் மிக முக்கியமான நான்கு புனித ஸ்தலங்கள் என்று கருதப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். இராமானுஜர் ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டுகள் மேல்கோட்டையில் தங்கி, விக்ரஹ வழிபாட்டிற்குரிய உயரிய தரத்தை வகுத்துக் கொடுத்தார், இஃது இன்றளவும் பின்பற்றப்படுகிறது. மேல்கோட்டையின் பிரதான கோயில் திருநாராயணரின் திருக்கோயில்; மேலும், இங்குள்ள ஒரு குன்றின் மீது யோக நரசிம்மருக்கென அமைக்கப்பட்டுள்ள கோயிலும் முக்கியமானதாகும். மேல்கோட்டையை தரிசிப்பதற்கு நான் எனது ஆன்மீக குருவான தவத்திரு. ஸ்ரீதர ஸ்வாமி, மற்றும் சில இஸ்கான் பக்தர்களுடனும் சென்றேன். பல தென்னிந்திய கோயில்களில் விஷேச பூஜைகள் செய்ய நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு, ...

சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள், இறையுணர்வை அடைவதில்லை

சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள், இறையுணர்வை அடைவதில்லை அக்ஞஷ் சாஷ்ரத்ததானஷ் ச ஸம்ஷயாத்மா வினஷ்யதி நாயம் லோகோ (அ)ஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஷயாத்மன மொழிபெயர்ப்பு ஆனால், சாஸ்திரங்களை சந்தேகிக்கும் நம்பிக்கையற்ற முட்டாள் மனிதர்கள், இறையுணர்வை அடைவதில்லை; அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர். சந்தேகம் கொள்ளும் ஆத்மாவிற்கு இவ்வுலகிலோ மறு உலகிலோ இன்பம் இல்லை. பொருளுரை தரமான, அதிகாரப்பூர்வமான சாஸ்திரங்களில் பகவத் கீதையே மிகச்சிறந்ததாகும். மிருகங்களைப் போல இருக்கும் மனிதர்களுக்கு சாஸ்திரத்தின் மீது நம்பிக்கையோ சாஸ்திர ஞானமோ இல்லை; சிலர், சாஸ்திரங்களைப் பற்றி அறிந்திருந்தாலும், அவற்றின் சில பகுதிகளை மேற்கோள் காட்ட முடிந்தாலும், அச்சொற்களில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. வேறு சிலர், பகவத் கீதையைப் போன்ற சாஸ்திரங்களில் நம்பிக்கை வைத்திருந்தாலும், புருஷோத்தமரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வழிபாட்டில் நம்பிக்கை கொள்வதில்லை. அத்தகைய நபர்கள் கிருஷ்ண உணர்வில் நிலைத்திருக்க இயலாது. அவர்கள் வீழ்ச்சியடைகின்றனர். மேலே குறிப்பிடப்பட்ட நபர்களில், நம்பிக்கையின்றி எப்போதும் சந்தேகத்தில் உழல்பவர்கள், ...