Skip to main content

Posts

பண்டரிபுரம்

இலட்சக்கணக்கான பக்தர்களின் அன்பிற்கு பிரியமான விட்டலரின் பூமிக்கு ஒரு பயணம் வழங்கியவர்: தவத்திரு. லோகநாத ஸ்வாமி பாரத பூமியெங்கும் முழுமுதற் கடவுள் பல்வேறு ரூபங்களில் வெவ்வேறு கோயில்களில் வழிபடப்படுகிறார். அவற்றில் சில கோயில்களும் விக்ரஹங்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர், திருப்பதியில் பாலாஜி, குருவாயூரில் குருவாயூரப்பன், உடுப்பியில் கிருஷ்ணர், துவாரகையில் துவாரகாதீஷர் என்று இருப்பதைப் போல, மஹாராஷ்டிராவின் பண்டரிபுரத்தில் பகவான் கிருஷ்ணர் ஸ்ரீ விட்டலராக வீற்றுள்ளார். அவர் தமது பக்தர்களால் பாண்டுரங்கர் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். பண்டரிபுரம் மும்பைக்கு தென்கிழக்கில் சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சிலரால் பூ-வைகுண்டம் (பூலோகத்தில் உள்ள வைகுண்டம்) என்றும், சிலரால் தக்ஷிண துவாரகை (தென்னிந்தியாவின் துவாரகை) என்றும் அழைக்கப்படும் இத்திருத்தலம் பீமா நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இந்த நதி பண்டரிபுரத்தை அடையும்போது பிறைநிலை போன்று தோற்றமளிப்பதால், இங்கே சந்திரபாகா என்று அழைக்கப்படுகிறது. விட்டலரின் பக்தர்களுக்கு இந்நதி கங்கையைப் போன்று புனி...

ஏகசக்ரா

இன்றைய இந்தியாவின் மேற்குவங்களா மாநிலத்தில், சைதன்ய மஹாபிரபு தோன்றிய மாயாபுரிலிருந்து 165 கி.மீ. தொலைவில் வடமேற்கு திசையில் அமைந்திருப்பதே ஏகசக்ரா என்னும் திருத்தலம். ஆதி குருவான பலராமர் கலி யுகத்தில், 1474இல் நித்யானந்த பிரபுவாக அவதரித்த இத்திருத்தலத்தை தற்போது பீர்சந்திரபூர் என்ற பெயரிலும் அழைப்பதுண்டு. மஹாபாரதத்தை அறிந்தவர்களுக்கு ஏகசக்ரா என்றவுடன் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் வனவாசத்தின்போது பகாசுரன் என்னும் அசுரனை கொன்றது நினைவுக்கு வரும். குருக்ஷேத்திரப் போரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பீஷ்மரை கொல்வதற்கு தேரின் சக்கரத்தை கையிலேந்தி பிறகு அந்த சக்கரத்தை வீசி எறிந்தபோது, அந்த ஒரு சக்கரம் விழுந்த இடமே ஏகசக்ரா என்று பெயரிடப்பட்டது. ஏகசக்ராவில் அமைந்துள்ள திருத்தலங்களை அறிவதற்கு முன் நித்யானந்த பிரபுவின் தெய்வீக தன்மையையும் லீலைகளையும் சற்றேனும் தெரிந்துகொள்வது அவசியம். ஆதி குருவான பலராமர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மூத்த சகோதரரும் ஆதி குருவுமான பலராமர், கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபுவின் லீலையில் நித்யானந்த பிரபுவாகவும், இராமரின் லீலையில் லக்ஷ்மணராகவும் பங்கெடுத்து கொள்கிறார். நித்யானந...

உள்நோக்கமற்ற நாம ஸங்கீர்த்தனம்

  தாடியுடன் இருந்த சாது ஒருவர் கடவுளின் பெயர்களை உச்சரித்து, அதன் மூலம் மக்களின் நோய்களை தீர்ப்பதாகக் கூறி பல கூட்டங்களை பம்பாய் முழுவதும் நிகழ்த்தி வந்தார். அவரது கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்தனர், பலர் குணமடைந்தனர். அவர் ஸ்ரீல பிரபுபாதரிடம், அதே போன்ற பிரம்மாண்டமான கூட்டங்களை நிகழ்த்தி ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்தால் மக்கள் பலர் பயனடைவர் என்றும், அதற்கு பிரபுபாதரும் தம்முடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். அவர் பிரபுபாதரிடம் கூறினார்: “நானும் கூட்டத்தைக் கூட்டுகிறேன், நீங்களும் கூட்டத்தைக் கூட்டுகிறீர்கள். நானும் மக்களை கடவுளின் பெயர்களை உச்சரிக்க வைக்கின்றேன், நீங்களும் மக்களை ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்க வைக்கின்றீர்கள். எனவே, நாம் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்.” ஸ்ரீல பிரபுபாதரோ முடியாது என்று மறுப்பு தெரிவித்து கூறினார்: “இஃது எங்களின் கோட்பாடுகளுக்கு விரோதமானது. கடவுளின் நாமமும் கடவுளே, நாம் கடவுளின் சேவகர்கள். நாம் கடவுளின் திருநாமங்களை நமது புலனின்பத்திற்காகவோ பௌதிகத் தேவைகளுக்காகவோ பயன்படுத்தக் கூடாது. எவ்வித சொந்த உள்நோக்கமும...

தமோ குணத்தில் செய்யப்படும் பக்தித்தொண்டு

  அபிஸந்தாய யோ ஹிம்ஸாம் தம்பம் மாத்ஸர்யமேவ வா ஸம்ரம்பீ பிந்நத்ருக் பாவம் மயி குர்யாத்ஸ தாமஸ : மொழிபெயர்ப்பு பொறாமை , தற்பெருமை , வன்முறை மற்றும் கோபம் இவை உள்ள ஒருவரால் நிறைவேற்றப்படும் பக்தித் தொண்டு இருட்டாகிய ( தமோ ) குணத்தில் உள்ளதாகக் கருதப்படுகிறது . பொருளுரை மிகவுயர்ந்த , மிகவும் புகழ்வாய்ந்த மதம் என்பது காரணம் அற்ற , செயல் நோக்கமற்ற பக்தித் தொண்டைச் செய்தலாகும் என்று ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் காண்டம் இரண்டாம் அத்தியாயத்தில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது . தூய பக்தித் தொண்டில் , பரம புருஷ பகவானை மகிழ்விப்பது ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் . அது உண்மையில் நோக்கமல்ல ; அது உயிரினத்தின் தூய நிலையாகும் . கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் , ஒருவர் பக்தித் தொண்டில் ஈடுபடும் பொழுது , முழுச் சரணாகதியில் உண்மை ஆன்மீக குருவின் உபதேசத்தைப் பின்பற்ற வேண்டும் . ஆன்மீக குருவானவர் பகவானின் பிரத்யட்ச பிரதிநிதி ஆவார் . ஏனெனில் , அவர் சீட மரபால் , பகவானின் உபதேசங்களை உள்ளவாறே தாம் பெறுவார் ; பிறருக்கும் கொடுப்பார...