Skip to main content

Posts

மனத்தை வெல்வதில் நாம் தோல்வியுற்றால், சாம்ராஜ்யங்களை வென்றாலும் தோற்றவர்களேயாவோம்.

  கிருஷ்ண புலி ஸேய் ஜீவ-அனாதி-பஹிர் முக அதயேவ மாயா தாரே தேய ஸம்ஸார-துக்க” “கிருஷ்ணரை மறந்துவிட்டு காலங்காலமாக மனிதன் பிரபுவின் புற அம்சத்தினால் வசீகரிக்கப்பட்டு வந்துள்ளான். ஆகையால் பொய்த் தோற்றமான மாயை அவனது ஜடவாழ்வில் எல்லாவிதமான துயரங்களையும் தந்துள்ளது.” மனிதன் தன் அமைப்பில் ஆத்மாவாவான்; உன்னதமான பிரபுவின் அம்சமாவான். மனம் மாசடைந்தும், மனிதன் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறு சுதந்திரம் காரணமாகப் புரட்சி செய்கிறான். இந்த நிலையில் அவன் மனம் “நான் ஏன் கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும்? நானே கடவுள்” என்று அவனுக்குச் சொல்லித் தருகிறது. இவ்வாறாக, தவறான கருத்தில் செயல்பட்டு அவன் வாழ்வு பாழ்படுகிறது. நாம் சாம்ராஜ்யங்கள் உட்பட எதையெதையோ வெற்றி காண முயற்சிக்கிறோம். ஆனால் நம் மனத்தை வெல்வதில் நாம் தோல்வியுற்றால், சாம்ராஜ்யங்களை வென்றாலும் தோற்றவர்களேயாவோம். சக்ரவர்த்திகள் ஆனாலும் நம்முள் நம் மாபெரும் எதிரி இருப்பான். அவன் நம் சொந்த மனம். ஜிதாத்மன: ப்ரசாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித: சீதோஷ்ணஸுகதுக்கேஷு ததா மானாபமானயோ: “மனதை வென்றவனுக்கு அவன் நிலைபெற்றுவிடுவதால், பரமாத்மா ஏற்கனவே அடையப்பட்டுவிடுகிறா...

ஷ்ருண்வதாம் ஸ்வ-கதா: க்ருஷ்ண புண்ய-ஷ்ரவண-கீர்தன:

  சூரியனில் இருள் என்னும் கேள்விக்கு இடமில்லாததைப் போலவே, ஆன்மீக உலகிலும் இருள் அல்லது அறியாமை என்னும் கேள்விக்கு இடமே இல்லை. அங்குள்ள அனைவரும் அனைத்து பொருள்களும் ஸுத்த-ஸத்வ நிலையில், தூய்மையான ஸத்வ குணத்தில் இருக்கின்றன(ர்). சாதாரண ஸத்வம் அல்ல, ஸுத்த-ஸத்வம். இந்த பௌதிக உலகில் முக்குணங்கள் உள்ளன–ஸத்வம், ரஜோ, தமோ. இவற்றில் எந்த குணமும் தூய்மையானதல்ல: ஒன்று மற்றொன்றோடு கலந்துள்ளது. அந்த கலவையினால் பல தரப்பட்ட உயிரினங்களைப் பார்க்கின்றோம். ஆனால் நாம் ஸுத்த-ஸத்வ, தூய்மையான ஸத்வத்தின் தளத்திற்கு வர வேண்டும். இதற்கான மிகச்சிறந்த வழி, அதிகாரபூர்வமான மூலத்திலிருந்து கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதாகும். இதனை ஸ்ரீமத் பாகவதம் (1.2.17) பின்வருமாறு விளக்குகின்றது: ஷ்ருண்வதாம் ஸ்வ-கதா: க்ருஷ்ண புண்ய-ஷ்ரவண-கீர்தன: ஹ்ருத்யந்த: ஸ்தோ ஹ்யபத்ராணி விதுனோதி ஸுஹ்ருத் ஸதாம் “அனைவரின் இதயத்திலும் பரமாத்மாவாக இருப்பவரும், உண்மையான பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்பவருமான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் செய்திகளை முறையாகக் கேட்பதும் பாடுவதும் புண்ணியம் தரக்கூடியதாகும். அச்செய்தி களைக் கேட்பதில் ஆர்வத்தை வளர்த்துக்...

வருத்தம் என்பது இழப்பிற்காக, ஆசை என்பது ஒன்றை அடைவதற்காக

  உண்மையாக ஆன்மீக உணர்வில் நிலைபெறும் பொழுது நம்முடைய குணங்களில் அல்லது அறிகுறிகளில் மாற்றங்கள் தோன்றும் . அந்த அறிகுறிகள் யாவை ? ஒருவன் தன்னுடைய ஆன்மீக உணர்வில் நிலை பெற்றுவிட்ட பிறகு , அவனுக்கென்று ஆசையோ , வருத்தமோ இருக்காது . வருத்தம் என்பது இழப்பிற்காக , ஆசை என்பது ஒன்றை அடைவதற்காக . இரண்டு விதமான வியாதிகள் இந்த பௌதிக உலகை விவரிக்கிறது : நம்மிடம் எது இல்லையோ அதற்காக நாம் ஆசைப்படுவது , “ எனக்கு இந்தப் பொருட்கள் கிடைத்தால் நான் இன்பமாக இருப்பேன் . என்னிடம் பணம் இல்லை , அதனால் எனக்கு ஒரு பத்து லட்ச ரூபாய் கிடைத்தால் , எனக்கு இன்பமாக இருக்கும் ”. நம்மிடம் பத்து லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் . எப்படியோ அது தொலைந்துவிட்டது . அப்பொழுது , “ அய்யய்யோ பணத்தை தொலைத்துவிட்டேனே ” என்று அழுகிறோம் . நாம் பணம் சம்பாதிப்பதற்காக ஆசைப்படுவது என்பது ஒரு விதமான துன்பம் . அதே போல் தான் இழப்பிற்காக வருத்தப்படுவதும் ஒருவிதமான துன்பம் . ஆனால் நாம் பிரம்ம பூத நிலையில் இருக்கும் பொழுதோ ஆசைப்படுவ...

கிருஷ்ணர் இன்பத்தின் இருப்பிடம்

  கிருஷ்ண - இது ஒரு உன்னதமான சப்தம். கிருஷ்ண என்றால் மிக உயர்ந்த ஆனந்தம் அல்லது இன்பம் என்று பொருள். எல்லா உயிரினங்களும் இன்பத்தைத் தேடி அலைகின்றன. ஆனால் பௌதிக நோக்குள்ள இந்த வாழ்க்கையில், நாம் இன்பத்தை பூர்த்தி செய்து கொள்ள நினைக்கும் ஒவ்வொரு அடியிலும் குழப்பத்தையே சந்திக்கிறோம். இன்பத்தை அனுபவிப்பதற்கான உண்மையான தகவல் நம்மிடம் இல்லாததே இதற்கு காரணம். ஒருவன் உண்மையான இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் அவன், தான் இந்த உடல் அல்ல, தான் ஒரு உணர்வு என்பதை உணர வேண்டும். உணர்வு என்பது கூட சரியாகாது. ஏனென்றால் உணர்வே நம்முடைய உண்மை நிலைக்கான அறிகுறி. அதாவது நான் ஒரு ஆத்மா, நான் தற்பொழுது இந்த பௌதிக உடலுடன் இணைந்துள்ளேன். தற்கால பௌதிக விஞ்ஞானிகள் இந்த பௌதிக விஷயத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால்தான் அவர்கள் சில சமயங்களில் ஆத்மாவைப் பற்றி அறிந்து கொள்வதில் திசை திருப்பப்படுகிறார்கள். ஆனால் தூய ஆத்மா என்பது உண்மையே. இதை ஒவ்வொருவரும் தமது உணர்வின் மூலம் உணரலாம். தூய உணர்வே தூய ஆத்மாவின் அறிகுறி என்பதை எந்தக் குழந்தையும் புரிந்து கொள்ளும். பகவத் கீதையிலிரு...

பண்டரிபுரம்

இலட்சக்கணக்கான பக்தர்களின் அன்பிற்கு பிரியமான விட்டலரின் பூமிக்கு ஒரு பயணம் வழங்கியவர்: தவத்திரு. லோகநாத ஸ்வாமி பாரத பூமியெங்கும் முழுமுதற் கடவுள் பல்வேறு ரூபங்களில் வெவ்வேறு கோயில்களில் வழிபடப்படுகிறார். அவற்றில் சில கோயில்களும் விக்ரஹங்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர், திருப்பதியில் பாலாஜி, குருவாயூரில் குருவாயூரப்பன், உடுப்பியில் கிருஷ்ணர், துவாரகையில் துவாரகாதீஷர் என்று இருப்பதைப் போல, மஹாராஷ்டிராவின் பண்டரிபுரத்தில் பகவான் கிருஷ்ணர் ஸ்ரீ விட்டலராக வீற்றுள்ளார். அவர் தமது பக்தர்களால் பாண்டுரங்கர் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். பண்டரிபுரம் மும்பைக்கு தென்கிழக்கில் சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சிலரால் பூ-வைகுண்டம் (பூலோகத்தில் உள்ள வைகுண்டம்) என்றும், சிலரால் தக்ஷிண துவாரகை (தென்னிந்தியாவின் துவாரகை) என்றும் அழைக்கப்படும் இத்திருத்தலம் பீமா நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இந்த நதி பண்டரிபுரத்தை அடையும்போது பிறைநிலை போன்று தோற்றமளிப்பதால், இங்கே சந்திரபாகா என்று அழைக்கப்படுகிறது. விட்டலரின் பக்தர்களுக்கு இந்நதி கங்கையைப் போன்று புனி...

ஏகசக்ரா

இன்றைய இந்தியாவின் மேற்குவங்களா மாநிலத்தில், சைதன்ய மஹாபிரபு தோன்றிய மாயாபுரிலிருந்து 165 கி.மீ. தொலைவில் வடமேற்கு திசையில் அமைந்திருப்பதே ஏகசக்ரா என்னும் திருத்தலம். ஆதி குருவான பலராமர் கலி யுகத்தில், 1474இல் நித்யானந்த பிரபுவாக அவதரித்த இத்திருத்தலத்தை தற்போது பீர்சந்திரபூர் என்ற பெயரிலும் அழைப்பதுண்டு. மஹாபாரதத்தை அறிந்தவர்களுக்கு ஏகசக்ரா என்றவுடன் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் வனவாசத்தின்போது பகாசுரன் என்னும் அசுரனை கொன்றது நினைவுக்கு வரும். குருக்ஷேத்திரப் போரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பீஷ்மரை கொல்வதற்கு தேரின் சக்கரத்தை கையிலேந்தி பிறகு அந்த சக்கரத்தை வீசி எறிந்தபோது, அந்த ஒரு சக்கரம் விழுந்த இடமே ஏகசக்ரா என்று பெயரிடப்பட்டது. ஏகசக்ராவில் அமைந்துள்ள திருத்தலங்களை அறிவதற்கு முன் நித்யானந்த பிரபுவின் தெய்வீக தன்மையையும் லீலைகளையும் சற்றேனும் தெரிந்துகொள்வது அவசியம். ஆதி குருவான பலராமர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மூத்த சகோதரரும் ஆதி குருவுமான பலராமர், கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபுவின் லீலையில் நித்யானந்த பிரபுவாகவும், இராமரின் லீலையில் லக்ஷ்மணராகவும் பங்கெடுத்து கொள்கிறார். நித்யானந...