Skip to main content

Posts

மஹாபிரபுவின் வட இந்தியப் பயணங்கள்

  ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள் வழங்கியவர்   :- பக்தி விகாஸ ஸ்வாமி மஹாபிரபுவின் வட இந்தியப் பயணங்கள் நவத்வீப பயணம் தென்னிந்தியாவிலிருந்து புரிக்குத் திரும்பிய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்குச் செல்லும் ஆவலை மீண்டும்மீண்டும் வெளிப்படுத்தினார், ஆனால் அவரது சகாக்கள் ஏதேனும் காரணத்தைக் கூறி அவரைத் தாமதப்படுத்தினர். எனினும், காலப்போக்கில் அவர்களது அனுமதியுடன் கௌராங்கர் வங்காளத்தின் வழியாக விருந்தாவனத்திற்குப் புறப்பட்டார். நவத்வீபவாசிகள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பெருமையினை அப்போது மேன்மேலும் உணர்ந்திருந்தனர். அதனால், அவரது ஸங்கீர்த்தன இயக்கத்தை எதிர்த்தவர்களும்கூட, அப்போது அவரைக் காண்பதற்காகவும் அவரது ஆசிகளைப் பெறுவதற்காகவும் அவரை அலட்சியம் செய்து அபராதம் இழைத்ததற்கு மன்னிப்புக் கோரி கெஞ்சுவதற்காகவும் படகினுள் ஏறினர். படகு ஏறக்குறைய மூழ்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் அதில் ஏறியது, வேறு சிலர் படகிற்காகக் காத்திராமல் நதியில் நீந்தி மறுகரையை அடைந்தனர். பகவான் சைதன்யர் எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் பெரும் திரளான மக்கள் அவரது தாமரைத் திருவடிகளில் விழுந்தனர். இஸ்லாமிய மன்...