Skip to main content

Posts

மறப்போம் மன்னிப்போம்

 

காளிதேவியின் பிரசாதம் என்று ஏற்றுக்கொள்பவர்கள் உண்மையில் யாருடைய பிரசாதத்தை ஏற்றுக்கொள்கின்றனர்

காளிதேவியின் பிரசாதம் என்று ஏற்றுக்கொள்பவர்கள் உண்மையில் யாருடைய பிரசாதத்தை ஏற்றுக்கொள்கின்றனர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 கலியுகத்தில் மனிதர்கள் தாங்கள் உண்பதற்காக நிறைய இறைச்சிக் கூடங்களைத் திறக்கின்றனர். அதனால் பழைய சடங்குகளும், விழாக்களும் கொண்டாடப்பட்டால் மக்கள் அவற்றைப் பயன்படுத்தி மேலும் மேலும் விலங்குகளைக் கொல்வதற்குத் தூண்டப்படுவர். கல்கத்தாவில் உள்ள இறைச்சிக் கடைகளில் காளியின் படத்தை வைத்திருப்பார்கள், மாமிசம் உண்போர் இதுபோலக் காளியின் படங்கள் வைத்திருக்கும் கடைகளிலேயே இறைச்சிகளை வாங்குவர். ஏனெனில் அது காளிதேவிக்கு படைக்கப்பட்ட நைவேத்தியம் என்பது அவர்கள் கருத்து. காளிதேவி சிவபெருமானின் சிறந்த துணைவியாதலினால் அவள் புலால் உண்ணமாட்டாள் என்பதை அவர்கள் அறிவதில்லை. சிவபெருமான் சிறந்த வைணவராதலினால் அவர் புலால் உண்ணுவதில்லை. மேலும் அவருக்கு அளிக்கும் படையல்களையே காளிதேவியும் ஏற்றுக்கொள்கிறாள். அதனால் அவள் இறைச்சியோ, மீனோ உண்பதற்கான சாத்தியமே இல்லை. இதுபோன்ற நிவேதனங்கள் எல்லாம் காளிதேவியின் அடியவர்களான பேய், பூதம், பிசாசு மற்றும் ராட்சர்களுக்கு அளிக்கப்படுவதாகும். அவர்களே இவைகளை ஏற்றுக் க...

காளி தேவி மாமிசம் சாப்பிடுவார்களா?

 காளி தேவி மாமிசம் சாப்பிடுவார்களா? 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பிரம்மானந்தா: காளி மாமிசம் சாப்பிடுவார்களா? பிரபுபாதா: காளி மாமிசம் உண்பதில்லை, ஆனால் மாமிசம் உண்பதை விட்டுவிட இயலாதவர்கள், ஒரு ஆட்டை - (பசுவை அல்ல) அல்லது ஒரு சிறிய விலங்கை காளி தேவியின் முன் அமாவாசை இரவன்று (பகலில் அல்ல) பலியிட்டு, அதை சாப்பிடலாம் என்பது சாஸ்திரத்தின் கட்டளையாகும். பஞ்சத்ரவிடா: அவ்வாறு வழங்கப்பட்டால், அந்த மாமிசத்தை யார் ஏற்றுக்கொள்கிறார்கள்?அது யாருடைய பிரசாதம்? யார் அதை உண்பார்கள்? பிரபுபாதா: பிரசாதம் அல்ல ... அந்த மாமிசம் காளியால் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை, ஆனால் அது காளியின் கூட்டாளிகளான சூனியக்காரிகளாலும் மற்றவர்களாலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிரம்மானந்தா: ஸ்ரீமத் பாகவதத்தில், காளி தேவி தன் கணவரான சிவ பெருமானின் பிரசாதத்தை ஏற்றுக்கொள்கிறார் என்று எழுதியிருக்கிறீர்கள்.  பிரபுபாதா: ஆமாம். பிரம்மானந்தா: அப்படியானால் காளி தேவி சைவம். சரியா? பிரபுபாதா: ஆமாம். 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே ...

ஆன்மீக குருவின் அவசியம்

 

குருதத்வம்

 

குருதத்வம்

 

குருதத்வம்

 

குருதத்வம்

 

குருதத்வம்

 

பகவான், தமது பக்தர்களுக்கு இழைக்கப்படும் அவமானத்தை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டார்.

  ராஜஸுய யாகத்தில் புனிதப்படுத்தப்பட்டிருந்த அழகிய கேசம் திரௌபதிக்கு இருந்தது . பாண்டவர்கள் அவளைப் பந்தயத்தில் தோற்றுப் போனதும் , துச்சாதனன் அவளை அவமானப்படுத்த எண்ணி அவளது புகழுக்குரிய கூந்தலைத் தொட்டான் . இந்நிலையில் திரௌபதி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதங்களில் விழுந்தாள் . அப்போது , குருட்சேத்திர யுத்தத்தின் பயனாக , துச்சாதனன் மற்றும் அவனது குழுவினரின் எல்லா மனைவிகளும் தங்களது கூந்தல்கள் அவிழ்க்கப்பட்டவர்கள் ஆகவேண்டும் என்று கிருஷ்ணர் முடிவு செய்தார் . இவ்வாறாக குருட்சேத்திரப் போர்க்களத்தில் திருதராஷ்டிரரின் எல்லா மக்களும் , பேரன்களும் இறந்தபின் , அவர்களது மனைவிகள் அனைவரும் விதவைகளானதால் , தங்களது கேசங்களை அவர்கள் அவிழ்த்துவிட வேண்டியதாயிற்று . அதாவது , பகவானின் சிறந்த பக்தையான திரௌபதியை துச்சாதனன் அவமானப்படுத்தியதால் , குரு வம்சத்தின் எல்லா மனைவிகளும் விதவைகளாயினர் . தனக்கு நேரும் அவமரியாதைகளை பொறுத்துக்கொள்ளும் பகவான் , தமது பக்தர்களுக்கு இழைக்கப்படும் அவமானத்தை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டார் . மிகச்சிறந்த ...

ஜராசந்தன்

  ஜராசந்தன் மிகவும் சக்தி வாய்ந்த மகத ராஜனாவான் . அவனது பிறப்பும் , செயல்களும் கவனத்தைக் கவரக்கூடியயவையாகும் . அவனது தந்தையான பிருஹத்ரத ராஜனும் பெரும் செழிப்பும் , சக்தியும் கொண்ட மகத ராஜனாக இருந்தவராவார் . ஆனால் காசிராஜனின் இரு புதல்விகளை மணந்தபோதிலும் அவருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கவில்லை . இதனால் ஏமாற்றமடைந்த அவர் மனைவிகளுடன் காட்டிற்குச் சென்று தவம் செய்தார் . அங்கு ஒரு மகனைப் பெறும் வரத்தை அரசனுக்களித்த மஹாரிஷி ஒருவர் , ராணிகள் உண்பதற்கு ஒரு மாங்கனியையும் கொடுத்தார் . அதை உண்ட ராணிகள் விரைவில் கர்ப்பவதிகளாயினர் . அரசர் மனம் மகிழ்ந்தார் . ஆனால் கனிந்ததும் , ராணிகள் ஒரு குழந்தையை இரு பாகங்களாக பெற்றெடுத்தனர் . அவ்விரு பாகங்களும் காட்டில் வீசப்பட்டன . அங்கு வாழ்ந்து வந்த ஓரரக்கி புதுக் குழந்தையின் விந்தையான தசையையும் இரத்தத்தையும் கண்டு மகிழ்ந்து , அதைப் பற்றி அறிய ஆவல்கொண்டு , இரு பாகங்களையும் ஒன்றாக இணைத்தாள் . குழந்தையும் முழுமையடைந்து உயிர் பெற்றது . ஜரா எனும் பெயர் கொண்ட அந்த அரக்கி , குழந்தைய...