Skip to main content

Posts

பகவானின் உடமையை துஷ்பிரயோகம் செய்யும் அதே சமயம் தன்னுணர்விலும் முன்னேறுவது சாத்தியமில்லை.

  இருப்பவை அனைத்தும் பரமபுருஷரின் சக்தியும், உடமையும் ஆகும். அனைத்தும் அவரது அன்புத் தொண்டில் உபயோகிக்கப்படவேண்டியவையே. ஜடப் பொருட்களை பகவானிலிருந்து வேறுபட்டவையாகப் பார்த்து, தன்னால் அவை அனுபவிக்கப்பட வேண்டியவை என்று எண்ணுவது பிரமையாகிய ஜட இருமை (வைகல்பிகம் ப்ரமம்) எனப்படுகிறது. உணவு, உடை, வசிப்பிடம், அல்லது வாகனம் போன்ற புலன் நுகர்ப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போது, அவற்றின் நன்மை தீமைகளை ஒருவன் கருத்திற்கொள்கிறான். இதன் விளைவாக ஜட வாழ்வில் ஒருவன் சொந்த சுகத்திற்காக மிகச் சிறந்த புலன் நுகர்ப் பொருளைப் பெற முயல்வதில் இடைவிடாத கவலைக்கு உள்ளாகிறான். ஆனால் அனைத்தும் பகவானின் உடமை என்பதை ஒருவன் உணர்வானாயின், அனைத்தும் பகவானின் திருப்திக்காகவே உள்ளன என்பதைக் காண்பான். அவனுக்குச் சொந்த கவலை எதுவும் இருக்காது. ஏனெனில் பகவானின் அன்புத் தொண்டில் ஈடுபடுவதிலேயே அவன் முழு திருப்தியடைகிறான். பகவானின் உடமையை துஷ்பிரயோகம் செய்யும் அதே சமயம் தன்னுணர்விலும் முன்னேறுவது சாத்தியமில்லை. ( ஶ்ரீமத் பாகவதம் / 11.22.57  / பொருளுரை  வழங்கியவர்:    ஶ்ரீல பிரபுபாதர்    ) 🍁🍁...

எளிய வாழ்வினாலும், உயர்ந்த சிந்தனை

  பிபந்தி யே பகவத ஆத்மன : ஸதாம் கதாம்ருதம் ஸ்ரவண - பூதேஷு ஸம்ப்ருதம் புனந்தி தே விஷய - விதூஷிதாசயம் வ்ரஜந்தி தச் - சரண - ஸரோருஹாந்திகம் மொழிபெயர்ப்பு பக்தர்களின் அன்புக்குரியவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அமிர்கம் போன்ற கதைகளை செவிகள் மூலமாக அருந்துபவர்கள் , ஜட இன்பமெனும் களங்கப்பட்ட வாழ்வின் நோக்கத்தை புனிதப் படுத்தி , பரமபதத்தை , அவரது ( முழுமுதற் கடவுள் ) தாமரைப் பாதங்களைச் சென்றடைகின்றனர் . பொருளுரை ஜட வசதிகளை அனுபவிக்க வேண்டுமென்ற கறைபடிந்த நோக்கமே மனித சமூகத்தின் துன்பங்களுக்குக் காரணம் . புலன் நுகர்வுக்காக ஜட வசதிகளைச் சுரண்டுவதில் மனித சமூகம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக ஈடுபடுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக பகவானின் மாயையான , ஜடச் சக்தியில் அது சிக்கிக் கொள்கிறது . இவ்வாறாக உலகின் துன்பம் குறைக்கப் படுவதற்கு பதிலாக தீவிரமாக்கப்படுகிறது . உணவு தானியங்கள் , பால் , பழம் , மரம் , கல் , சர்க்கரை , பட்டு நூல் , இரத்தினங்கள் , பருத்தி , உப்பு , நீர் மற்றும் காய்கறிகள் போன்றவைகளின் உருவில் மனிதனின் அன்றாடத்...