Skip to main content

Posts

ஸ்தித–ப்ரக்ஞன்

  ஆபூர்யமாணம் அசல – ப்ரதிஷ்ட ம் ஸமுத் ரம் ஆப : ப்ரவிஷ ந்தி யத் வத் தத் வத் காமா யம் ப்ரவிஷ ந்தி ஸர்வே ஸ ஷா ந்திம் ஆப்னோதி ந காம – காமீ நதிகள் கடலில் வந்து கலந்தாலும் , கடல் மாறுவதில்லை . அது போல தடையின்றி வரும் ஆசைகளால் பாதிக்கப்படாதவன் மட்டுமே அமைதியை அடைய முடியும் . அத்தகு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்புபவனல்ல . பொருளுரை :  பெருங்கடலில் எப்போதும் நீர் நிரம்பியிருந்தாலும் , மழைக்காலத்தில் குறிப்பாக மேன்மேலும் நீரால் நிரம்புகின்றது . ஆயினும் கடல் எப்போதும் போல நிலையாக உள்ளது ; கிளர்ச்சியடைவதோ , தனது கரையைத் தாண்டுவதோ இல்லை . கிருஷ்ண உணர்வில் நிலை பெற்றவனின் விஷயத்திலும் இஃது உண்மையாகிறது . ஜடவுடல் இருக்கும் வரை புலனுகர்ச்சிக்கான ஆசைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் . தனது பூரண நிலையால் , பக்தன் இத்தகு ஆசைகளால் பாதிக்கப்படுவ தில்லை . கிருஷ்ண பக்தனுக்கு எதுவும் தேவையில்லை ; ஏனெனில் , அவனது எல்லா பௌதிகத் தேவைகளையும் இறைவனே பூர்த்தி செய்கிறார் . எனவே , அவன் தன்னில் முழுமையுடைய கடலைப் போன்றவன் . கட...

பக்தி தொண்டின் மகிமை

  அனைத்தும் பகவானாகவே இருப்பதால் , அவரை வழிபடுகதில் பயனில்லை என்று அருவவாதிகள் வாதிக்கின்றனர் . ஆனால் பகவானின் தேக உறுப்புக்களிலிருந்து பிறந்துள்ள பகுதிப் பொருட்களை உபயோகித்து , நன்றி உணர்வுடன் உருவவாதிகள் பகவானை வழிபடுகின்றனர் . பழங்களும் , பூக்களும் பூமித்தாயின் தேகத்திலிருந்து கிடைக்கின்றன . இருப்பினும் அறிவுள்ள பக்தன் பூமியிலிருந்து பிறந்த பொருட்களாலேயே பூமித்தாயை வழிபடுகிறான் . இதைப் போலவே , கங்கைத் தாய் கங்கை நீராலேயே வழிபாடு செய்யப்படுகிறாள் . இருப்பினும் அத்தகைய வழிபாட்டின் பலனை , வழிபடுபவன் அனுபவிக்கிறான் . பகவானின் உடலுறுப்புக்களிலிருந்து பிறந்த பொருட்களாலேயே அவரது வழிபாடும் நடத்தப்படுகிறது . இருப்பினும் பகவானின் ஒரு பாகமாக உள்ள வழிபாடு செய்பவன் , பகவானிடம் செய்யும் பக்தித் தொண்டின் பலனை அடைகிறான் . நானே பகவான் என்று அருவவாதி தப்பாக முடிவு செய்யும் வேளையில் , உருவவாதி , பகவானிலிருந்து எதுவுமே வேறானதல்ல என்பதைப் பூரணமாக உணர்ந்து , பக்தித் தொண்டால் பகவானை வழிபடுகிறான் . எனவே எதுவுமே தனக்குச் சொந்தமானதன...