Skip to main content

Posts

துன்பகரமான இப்பௌதீக உலகை கடவுள் ஏன் படைத்தார்

  அரசாங்கத்தில் ஒரு சிறைக் கூடத்தை உண்டாக்கியதற்காக மன்னரை ஒருவன் குறை கூறக் கூடாது . அதைப் போலவே , துன்பகரமான இவ்வுலகைப் படைத்ததற்காக பரமபுருஷரை ஓருவன் கண்டனம் செய்யக் கூடாது . சிறைக் கூடம் தேவையான ஒரு ஸ்தாபனமாகும் . இது அரசாங்கத்தின் சட்டங்களை மீறுபவர் களுக்காக உள்ளது . அதைப் போலவே , துன்பங்கள் நிறைந்த இந்த ஜட உலகம் பகவானால் படைக்கப்பட்ட தற்காலிகமான ஒரு ஏற்பாடாகும் . இது , பகவானை மறந்து , பொய்யான இத்தோற்றத்தை அடக்கியாள முயல்பவர்களுக்கென உள்ளதாகும் . ஆனால் பகவான் , வீழ்ந்த ஆத்மாக்களைத் தமது இராஜ்யத்திற்கு அழைத்துச் செல்ல மிகவும் ஆவலுடன் இருக்கிறார் . இக்காரணத்திற்காக அவர் அதிகாரப் பூர்வமான சாஸ்திரங்கள் , அவரது பிரதிநிதிகள் , மற்றும் சொந்த அவதாரங்கள் ஆகியவற்றின் மூலமாக பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கு பல சந்தர்ப்பங்களை அளித்துள்ளார் . அவருக்கு இந்த ஜட உலகில் நேரடியான பற்று இல்லையாகையால் , அதன் சிருஷ்டிக்காக அவரை நிந்திக்கக் கூடாது . ஶ்ரீமத் பாகவதம் 2.7.50 / பொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  க...

விதியை மதியால் வெல்ல முடியாது

 

விதியை மதியால் வெல்ல முடியாது

சில நேரங்களில் மகான்களும், மாமுனிவர்களும் கூட வாழ்க்கையில் நேர்மாறான விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கிறது. இது போன்ற நிகழ்வுகளை விதியின் செயலாக எடுத்துக்கொள்ள வேண்டும். மகிழ்ச்சியற்ற நிலைக்குப் போதுமான காரணங்கள் இருந்தாலும் அந் நேர்மாறான செயல்களை நிமிர்த்த வேண்டும் என்று எண்ணக் கூடாது, எத்தனைக்கெத்தனை இதனை நாம் சரி செய்ய முனைகின்றோமோ அத்தனைக்கத்தனை கவலையின் அடர்ந்த இருளினுள் அமிழ வேண்டியதிருக்கும். பகவான் கிருஷ்ணரும் இது தொடர்பாக நமக்கு அறிவுறுத்தியிருக்கின்றார். மனக்கொந்தளிப்பிற்கு இடங்கொடாது வருபவற்றைத் தாங்குகின்ற இதயம் பெறுதல் வேண்டும். ஶ்ரீமத் பாகவதம் 4.19.34 / பொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண🙏 🍁🍁🍁🍁🍁🍁🍁 மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.      சுத்த   பக்தி   வாட்ஸப்   க்ரூப்   சுத்த   பக்தி   டெலிகிராம்   க்ரூப்   உத்வேக   கதைகள் டெலிகிராம் க்ரூப்   சுத...

“ஸிவோ (அ)ஹம்” - “நான் சிவபெருமான்”

  சிவபெருமான் ஆடம்பரமான ஆடைகள் , ஆபரணங்கள் , மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதில்லை . ஆனால் இறுதியில் நாய்கள் தின்னப் போகும் இந்த உடலை அலங்கரிப்தில் மோகங்கொண்டவர்கள் அதைத் தானானக் கருதி மிகவும் ஆடம்பரமாக போற்றிப்பாதுகாக்கின்றனர் . இம்மனிதர்கள் சிவபெருமானைப் புரிந்து கொள்வதில்லை . மாறாக ஆடம்பரமான செல்வ வளத்திற்காக அவர்கள் அவரை அணுகுகின்றனர் . இரண்டு வகையான பக்தர்கள் சிவபெருமானுக்கு உண்டு . ஒரு பிரிவினர் முழு லோகாயத வாதிகள் அவர்கள் உடல் சம்பந்தப்பட்ட வளங்களை சிவபெருமானிடம் வேண்டுகின்றனர் . மற்றொரு பிரிவினர் அவரோடு ஒன்றாக இணைய வேண்டுமென்று விருமபுகின்றனர் . அவர்கள் பெரும்பாலும் மாயாவாதிகள் ஆவர் . அவர்கள் “ ஸிவோ ( அ ) ஹம் ” “ நான் சிவபெருமான் ” அல்லது “ முக்தி பெற்ற பிறகு நான் சிவபெருமானுடன் இணைவேன் ” என்று ஓதுகின்றனர் . மாறாக கர்மாக்ளும் , ஞானிகளும் பொதுவாக சிவபெருமானின் பக்தர்களேயாவர் . ஆயினும் அவர்கள் அவரது உண்மை நோக்கத்தினை அறிந்து கொள்வதில்லை . சில நேரங்களில் சிவபெருமானின் பக்தர்கள் அவரை...