அரசாங்கத்தில் ஒரு சிறைக் கூடத்தை உண்டாக்கியதற்காக மன்னரை ஒருவன் குறை கூறக் கூடாது . அதைப் போலவே , துன்பகரமான இவ்வுலகைப் படைத்ததற்காக பரமபுருஷரை ஓருவன் கண்டனம் செய்யக் கூடாது . சிறைக் கூடம் தேவையான ஒரு ஸ்தாபனமாகும் . இது அரசாங்கத்தின் சட்டங்களை மீறுபவர் களுக்காக உள்ளது . அதைப் போலவே , துன்பங்கள் நிறைந்த இந்த ஜட உலகம் பகவானால் படைக்கப்பட்ட தற்காலிகமான ஒரு ஏற்பாடாகும் . இது , பகவானை மறந்து , பொய்யான இத்தோற்றத்தை அடக்கியாள முயல்பவர்களுக்கென உள்ளதாகும் . ஆனால் பகவான் , வீழ்ந்த ஆத்மாக்களைத் தமது இராஜ்யத்திற்கு அழைத்துச் செல்ல மிகவும் ஆவலுடன் இருக்கிறார் . இக்காரணத்திற்காக அவர் அதிகாரப் பூர்வமான சாஸ்திரங்கள் , அவரது பிரதிநிதிகள் , மற்றும் சொந்த அவதாரங்கள் ஆகியவற்றின் மூலமாக பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கு பல சந்தர்ப்பங்களை அளித்துள்ளார் . அவருக்கு இந்த ஜட உலகில் நேரடியான பற்று இல்லையாகையால் , அதன் சிருஷ்டிக்காக அவரை நிந்திக்கக் கூடாது . ஶ்ரீமத் பாகவதம் 2.7.50 / பொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண க...