க்ருஷ்ண - வர்ணம் த்விஷாக்ருஷ்ணம் ஸாங்கோபாங்காஸ்த்ர - பார்ஷதம் யக்ஞை : ஸங்கீர்த்தன - ப்ராயைர் யஜந்தி ஹி ஸு - மேதஸ : மொழிபெயர்ப்பு கலியுகத்தில் சிறந்த புத்திமான்கள் , சதா கிருஷ்ணருடைய நாமங்களைப் பாடிக் கொண்டிருக்கும் பகவானின் அவதாரத்தைக் கீர்த்தனை என்ற யாகத்தாலேயே பூஜிக்கின்றனர் . அவரது வர்ணம் கருமையில்லை என்றாலும் அவர் கிருஷ்ணரேயாவார் . அவர் தமது சகாக்களாலும் , சேவகர்களாலும் , ஆயுதங்களாலும் , அந்தரங்கத் தோழர்களாலும் சூழப்பட்டிருக்கிறார் . பொருளுரை இதே பதம் கிருஷ்ணதாஸ கவிராஜரால் சைதன்ய சரிதாம்ருதத்தில் ( ஆதி .3.52) மேற்கோள் காட்டப்பட்டுள்ளது . இச்சுலோகத்திற்கு ஸ்ரீல பிரபுபாதா பின்வரும் பொருளுரையைக் கொடுத்துள்ளார் . “ ஜீவ கோஸ்வாமி கிரம - ஸந்தர்பம் என்ற தமது பாகவத் உரையில் இச்சுலோகத்தைப் பின்வருமாறு விளக்குகிறார் . பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பொன்னிறமாகவும் தோன்றுகிறார் . அந்த பொன்னிற அவதாரம் , இக்கலியுகத்தில் சிறந்த அறிவாளிகளால் பூஜிக்கப்படும் பகவான் சைதன்யராவார் . இதை கர்க முனி பாகவதத்தில் உறுதி செய்த...