Skip to main content

Posts

கயா

  இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அழகான ஃபல்கு நதிக்கரையில் அமைந்திருப்பதே கயா என்னும் புனித க்ஷேத்திரமாகும். இதிகாசங்களான இராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் இந்த கயா க்ஷேத்திரம் நீத்தார் கடன் தீர்க்க நேர்த்தியான தீர்த்தம் என்று போற்றப்படுகிறது. சைதன்ய மஹாபிரபு, அத்வைத ஆச்சாரியர், இராமசந்திர பகவான் முதலிய பலரும் உலக மக்களின் தர்ம நெறி வாழ்விற்கு முன்னுதாரணமாக, கயாவிற்கு வருகை புரிந்து தமது மூதாதையர்களுக்கு பிண்டம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. பிண்ட தானத்திற்கு மிகச்சிறந்த இடமான இந்த கயாவின் மஹாத்மியத்தைச் சற்று காண்போம். கயாசுரன் அசுர குலத்தில் தோன்றிய கயாசுரன் கடுமையான தவத்தை மேற்கொண்டபோது தேவலோகமே நடுங்கியது. இதைக் கண்ட தேவர்கள் பிரம்மாவை நாடினர், பிரம்மதேவர் தேவர்களுடன் சிவபெருமானை நாடினார், சிவபெருமானோ அனைவருடன் இணைந்து விஷ்ணுவை நாடினார். தேவர்களின் பயத்தைப் போக்க பகவான் விஷ்ணு கயாசுரனிடம், வேண்டிய வரத்தைக் கேள்,” என நேரடியாகக் கூறினார். இதைக் கேட்டு தேவர்கள் நடுங்கிப் போனார்கள். இருப்பினும், கயாசுரன் உடனடியாக பகவான் விஷ்ணுவிடம், தேவர்கள், ரிஷிகள், துறவிகள் முதலியோரைக் காட்ட...

பிரயாகை

இன்றைய இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் , கங்கை , யமுனை , சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கின்ற (ஒன்று சேர்கின்ற) அழகான கரையில் அமைந்திருப்பதே பிரயாகை என்னும் திருத்தலம். பிரம்மதேவர் தனது முதல் பத்து யாகங்களை மேற்கொள்வதற்காக இந்த நதிக்கரையைத் தேர்ந்தெடுத்தார் என்பதால் , இவ்விடம் பிரயாகை என பெயர் பெற்றது. முகலாயரின் ஆட்சிக் காலத்தில் , சங்கமத்தின் கரையில் மன்னர் அக்பர் ஒரு பெரிய கோட்டையை எழுப்பி இலாகாபாத் (அலகாபாத்) என பெயரிட்டதால் , அலகாபாத் என்ற பெயரிலும் இவ்விடம் அறியப்படுகிறது. விஷ்ணுவிற்கு மிகவும் பிரியமான இடம் என்பதால் , தீர்த்த ராஜன் (திருத்தலங்களின் மன்னன்) என்றும் பிரயாகை புகழப்படுகின்றது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக , பிரயாகை என்றவுடன் பலரின் மனதில் எழுவது இலட்சக்கணக்கான மக்கள் பங்கு பெறும் கும்பமேளா நிகழ்ச்சியாகும் .   கும்பமேளாவின் வரலாறு   தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தபோது , கூர்மர் , தன்வந்திரி , மோஹினி என்று பகவானின் மூன்று அவதாரங்கள் அதில் பங்கெடுத்து கொண்டனர். அதனை ஒரு திகைப்பூட்டும் லீலை என்று சாஸ்திரம் வர்ணிக்கின்றது. தன்வ...