குருவாயூர் கேசவன் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆 கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூரப்பன் திருக்கோயில் உள்ளது .அங்கே வீற்றிருக்கும் பகவான் கிருஷ்ணன் வாசுதேவ கிருஷ்ணராக பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். பக்தர்களும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டு, பல விதமான திருவிழாகள், கோலாகலமான ஊர்வலங்கள், பிரசாத வினியோகம் போன்றவைகளில் பகவானை ப்ரீத்திபடுத்துகின்றனர். இறை சேவையில் பாகுபாடு கிடையாது.அனைத்து வகையான ஜீவராசிகளும் பகவானின் சேவைகளில் ஈடுபடலாம். அதுவே எல்லா ஜீவராசிகளுக்கும் உள்ள ஸ்வரூப நிலையாகும். இதை சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 20.108-109 ல் ஜீவேர ஸ்வரூப் ஹய- க்ரிஷ்ணேர நித்ய-தாஸ ஜீவனின் ஸ்வரூப நிலை கிருஷ்ணருடைய நித்திய சேவகனாக இருப்பதாகும். என்று விளக்கப்பட்டுள்ளது. அப்படி யானையின் உருவில் பகவான் நாராயணனை பிரார்த்தனை செய்த கஜேந்திரன் என்ற யானையை பற்றி ஶ்ரீமத் பாகவதம் 8 ஆம் காண்டத்தில் மிகவும் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. எந்த உருவத்திலும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு தூய்மையான சேவை செய்யலாம். அப்படி ஒரு வாய்ப்பு கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூரப்பன் திருக்கோயிலில...