பிரலம்பாசுரனின் முற்பிறவி ஆதாரம் :- கர்க சம்ஹிதை 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஸ்ரீ நாரதர் கூறினார்: 'மன்னா, ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு நாள் பலராமருடனும் ஆயர் குல சிறுவர்களுடனும் தன் பசுக்களை மேய்த்தபடி பாண்டிர வனத்தில் யமுனையின் கரையில் சிறுவர்களுக்கு உசிதமான விளையாட்டைக் விளையாட்டி கொண்டிருந்தார். ஸ்ரீ கிருஷ்ணர் , சிறுவர்கள் முதுகில் சுமக்கும் விளையாட்டை விளையாடியவாறு அழகிய பசுக்களை மேய்த்துக் கொண்டு காட்டில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். (இந்த விளையாட்டில் சில பிள்ளைகள் குதிரை முதலிய வாகனங்களாகவும், இன்னும் சிலர் அவற்றின் மீது ஏறி சவாரி செய்து விளையாட்டினர் ) அச்சமயம் கம்சனால் அனுப்பப்பட்ட பிரலம்பாசுரன் என்னும் அசுரன் ஆயர் குல சிறுவனை போல் வேடம் பூண்டு அங்கு வந்தான். மற்ற ஆயர் குல சிறுவர்கள் அவனை அறியவில்லை. ஆனால் ஸ்ரீ கிருஷ்ண பகவானிடமா அவன் மாயை மறைந்திருக்கும் ? விளையாட்டில் தோற்றுப்போகும் சிறுவன் வெல்பவனை முதுகில் ஏற்றிக் கொள்வான், ஆனால் பலராமர் வென்றபோது அவரை யாரும் முதுகில் சுமக்க தயாராக இல்லை . அப்போது பிரலம்பாசுரனே அவரை முதுகில் சுமந்து கொண்டு பாண்டீரவனத்திலிருந்...