Skip to main content

Posts

அர்ஜுனனின் பிரார்த்தனை

  ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 1 / அத்தியாயம்  7 / பதம் 22- 25 ************************************************************************* பதம் 22 அர்ஜுன உவாச க்ருஷ்ண க்ருஷ்ண மஹா - பாஹோ பக்தானாம் அபயங்கர த்வம் ஏகோ தஹ்யமானானம் அபவர்கோ ’ ஸி ஸம்ஸருதே : மொழிபெயர்ப்பு அர்ஜுனன் கூறினார் : எம்பெருமானே ஸ்ரீ கிருஷ்ணா , தாங்கள் சர்வ வல்லமையுடைய பரம புருஷ பகவானாவீர் . தங்களுடைய பல்வேறு சக்திகளுக்கு எல்லையே இல்லை . ஆகவே தாங்கள் ஒருவர்தான் உங்களுடைய பக்தர்களின் இதயங்களுக்கு அபயமளிக்கும் திறமை பெற்றவராவீர் . பௌதிக துன்பமெனும் தீயில் கருகிக் கொண்டிருக்கும் அனைவரும் உங்களிடம் மட்டுமே முக்திக்கான வழியைக் காணமுடியும் .   பதம் 23 த்வம் ஆத்ய : புருஷ : ஸாக்ஷாத் ஈஸ்வர : ப்ருக்ருதே : பர : மாயாம் வ்யுதஸ்ய சிச் - சக்த்யா கைவல்யே ஸ்தித ஆத்மனி   மொழிபெயர்ப்பு தாங்களே மூல முழுமுதற் கடவுளாவீர் . தாங்கள் சிருஷ்டி முழுவதிலும் விரிவடைந்திருப்பவரும் , பௌதிக சக்திக்கு மேற்பட்டவருமாவீர் . உங்களுடைய ஆன்மீக சக்தியின் பல...

பூதனை வதம் மற்றும் அவனது முற்பிறவி வர்ணனை

  பூதனை 🌼🌼🌼🌼🌼🌼🌼 ஸ்ரீ நாரதர் கூறுகிறார்: 'மன்னார், நந்தராய்ர் கம்சனுக்கு வரி செலுத்தவும் வசுதேவரின் நலம் அறியவும், தனக்கு மகன் பிறந்த செய்தியை அவரிடம் கூறவும் மதுராவிற்குச் சென்றார். அதேசமயம் கம்சனால் அனுப்பப்பட்ட துஷ்ட ராக்ஷஸி குழந்தைகளைக் கொல்வதற்காக நகரங்களிலும், வீடுகளிலும், மாட்டுத் தொழுவங்களிலும் சஞ்சரித்தவாறு இடையர்கள் அதிகம் வசிக்கும் கோகுலத்திற்கு வந்து சேர்ந்தாள். அவள் மூச்சு விடும்போது பன்றியைப்போல 'கர்கர்' எனும் ஒலி எழும்பியது. கோகுலத்திற்கு அருகில் வந்ததும் அவள் மாயையால் திவ்ய ரூபம் எடுத்துக் கொண்டாள். அவள் பதினாறு வயது யுவதியானாள். தன் அங்க காந்தியால் சசி, சரஸ்வதி, லக்ஷ்மி, ரம்பை, ரதி போன்றோரையும் திரஸ்கரிக்கச் செய்யும் அழகுருவை ஏற்றாள். நடக்கும்போது உயர்ந்த அவளது நகில்கள் தெய்வீக ஒளியோடு பிரகாசித்து அசைந்தாடின. அவளைக் கண்ட ரோஹிணியும் யசோதாவும் கூட பொலிவிழந்தவர்களானார்கள். அவள் வந்ததுமே பால கோபாலனை மடியில் எடுத்துக் கொண்டாள். தொடர்ந்து கொஞ்சிக் குலாவிய அந்த மகாகோரமான அரக்கி குழந்தையின் வாயில் ஹலா-ஹல விஷம் தடவிய தனது மார்பை வைத்தாள். இதைக்கண்டு மிகுந்த கோ...

வியாச தேவரின் பிரார்த்தனை

ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 1 / அத்தியாயம் 1 / பதம் 1 *************************************************************************   ஓம் நமோ பகவதே வாஸுதேவாய ஜன்மாதி அஸ்ய யதோ ’ ந்வயாத் இதரதஸ் சார்தேஷு அபிஜ்ஞ : ஸ்வராத் தேனே பிரஹ்ம ஹ்ருதாய ஆதி - கவயே முஹ்யந்தி யத் ஸூரய : தேஜோ - வாரி - ம்ருதாம் யதா வினிமயோ யத்ர த்ரிஸர்கோ ’ ம்ருஷா தாம்னா ஸ்வேன ஸதா நிரஸ்த - குஹகம் ஸத்யம் பரம் தீமஹி   மொழிபெயர்ப்பு   எம்பெருமானே , ஸ்ரீ கிருஷ்ணா , வசுதேவரின் புதல்வரே , எங்கும் வியாபித்திருக்கும் முழுமுதற் கடவுளே , தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கின்றேன் . தோற்றுவிக்கப்பட்டுள்ள பிரபஞ்சங்களின் படைத்தல் , காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய காரணங்களுக்கு மூல காரணமாகவும் , பூரண உண்மையாகவும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதால் அவரை நான் தியானிக்கிறேன் . எல்லா தோற்றங்களையும் அவர் நேராகவோ அல்லது மறைமுகமாகவோ அறிந்துள்ளார் . மேலும் அவருக்கப்பால் வேறெந்த காரணமும் இல்லாததால் அவர் சுதந்திரமானவராவார் . முதல் ஜீவனான பிரம்ம...

யசோதைக்குப் பிறந்த கிருஷ்ணர்

கிருஷ்ணர் மதுராவில் தேவகிக்குப் பிறந்து, பின்னர் கோகுலத்தில் யசோதையின் மகனாக வளர்ந்தார் என்பது தெரிந்த கதை. ஆனால் கிருஷ்ணர் தேவகிக்குப் பிறந்த அதே சமயத்தில் யசோதைக்கும் பிறந்தார் என்பது தெரியாத துணுக்கு. கிருஷ்ணரை தேவகியின் உண்மையான மகன் என்றும், யசோதையின் வளர்ப்பு மகன் என்றும் பெரும்பாலான மக்கள் அறிந்துள்ளனர். சாஸ்திரங்கள் பல்வேறு இடங்களில் இதனைத் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில், கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்கள் நமக்குத் தெரிவிப்பது யாதெனில், கிருஷ்ணர் ஒரே சமயத்தில் தேவகிக்கு மதுராவிலும் யசோதைக்கு கோகுலத்திலும் பிறந்தார் என்பதே. இது ஹரிவம்ஸ புராணத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பகவான் கிருஷ்ணர் விருந்தாவனத்தில் லீலைகள் புரியும்போது, அவர் விருந்தாவன கிருஷ்ணராகத் திகழ்கிறார். மதுராவிலும் துவாரகையிலும் அவர் வாசுதேவ கிருஷ்ணராகத் திகழ்கிறார். இஃது என்ன இரண்டு கிருஷ்ணர்? இரண்டு கிருஷ்ணர் இல்லை, ஒரே கிருஷ்ணர்தான், ஆனால் பா4வம் வேறு. கிருஷ்ணர் விருந்தாவனத்தில் வெளிப்படுத்தும் பா4வமும் இதர இடங்களில் வெளிப்படுத்தும் பா4வமும் வேறுபட்டவை. கிருஷ்ண லீலையை அறிந்தவர் எவரும் இதனை எளிதில் உணரலாம். விருந்தாவன ...