Skip to main content

Posts

சகடாசுரன் வதம் மற்றும் அவனது முற்பிறவி வர்ணனை

  சகடாசுரன் 🌼🌼🌼🌼🌼🌼🌼   ஸ்ரீ கர்கர் கூறினார்: 'சௌனகரே! நான் ஸ்ரீகிருஷ்ணனுடைய சிறந்த திவ்ய சரித்திரத்தை வர்ணித்தேன். இதை பக்தியோடு கேட்பவன் பேறு பெற்றவனாகிறான். அவனுக்கு பரம புருஷார்த்தம் கிட்டிவிடுமென்பதில் ஐயமில்லை.  ஸ்ரீ சௌனகர் கேட்டார்: 'முனிவரே! ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய மங்களமய சரித்திரம் அமுத ரஸத்தால் தயாரிக்கப்பட்டதான சிறந்த இனிய காண்டமாகும். (இனிப்பு பக்ஷணம்) இதை நேரடியாக தங்கள் வாயால் கேட்டு நாங்கள் தன்யமானோம். தவச்செல்வரே, சாதுக்களில் சிறந்தவரான பஹுலாஸ்வ மன்னன் ஸ்ரீகிருஷ்ணரின் பரம பக்தர். அவரது மனதில் எப்போதும் அமைதி குடிகொண்டிருந்தது. இதன் பிறகு அவர் நாரத முனிவரிடம் எந்த விஷயத்தைக் கேட்டார் என்பதைக் கூறியருளுங்கள். ஸ்ரீ கர்கர் கூறினார்: 'சௌனகரே! பின் மிதிலை மன்னன் பஹூலாஸ்வன் மகிழ்ச்சியும் அன்பும் ஒருங்கேயடைந்து பரவச நிலையடைந்தார். தர்மாத்மாவான அவர் பரிபூர்ணதம பகவான் ஸ்ரீகிருஷ்ணனை சிந்தித்தவாறு நாரதரிடம் கூறினார். பஹுலாஸ்வன் கூறினார்: 'முனிவரே! தாங்கள் மிக உயர்ந்த புண்ணியம் செய்துள்ளீர். தங்கள் சேர்க்கையால் நானும் பெறும்பேறு பெற்றவனானேன். ஏனெனில் பகவத் பக்தர்...
  ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 1 / அத்தியாயம் 8 / பதம் 18- 43   ************************************************************************* பதம் 18 குந்தி உவாச நமஸ்யே புருஷம் த்வாத்யம் ஈஸ்வரம் ப்ரக்ருதே : பரம் அலக்ஷ்யம் ஸர்வ - பூதானாம் அந்தர் பஹிர் அவஸ்திதம்   மொழிபெயர்ப்பு ஸ்ரீமதி குந்தி கூறினாள் : கிருஷ்ணா , தாங்கள் ஆதி புருஷரும் , ஜட இயற்கைக் குணங்களால் பாதிக்கப்படாதவருமாவீர் . எனவே தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் . அனைத்திற்கும் உள்ளேயும் , வெளியேயும் தாங்கள் இருப்பினும் , யாருக்கும் புலப்படாதவராகவே இருக்கிறீர்கள் . பதம் 19 மாயா - ஜவனிகாச்சன்னம் அக்ஞாதோக்ஷஜம் அவ்யயம் ந லக்ஷ்யஸே மூட - த்ருசா நடோ நாட்யதரோ யதா மொழிபெயர்ப்பு நீங்கள் குறையுடைய புலன் உணர்வின் எல்லைக்கு அப்பாற்பட்டவராவீர் . நீங்கள் மாயச் சக்தியின் திரையால் மூடப்பட்டுள்ள குறையற்றவராகவே என்றும் இருக்கிறீர்கள் . நடிகரைப் போல் உடை அணிந்திருப்பவரை அடையாளம் காண முடியாததைப் போலவே , முட்டாள்களின் கண்களுக்கு நீங்கள் புலப்படாதவராகவே ...