Skip to main content

Posts

கங்கா சாகர் - புனித கங்கை வங்க கடலில் சங்கமிக்கும் இடம்

பொங்கல் பண்டிகையை போன்று வட மாநிலங்களில் மகர சங்கராந்தி விழா பிரபலம். மேற்கு வங்க மாநிலத்தில் இந்த விழாவையொட்டி, கங்கா சாகர் தீவுக்கு ஏராளமான பகதர்கள் வருகை தந்து புனித நீராடுவது வழக்கம்.  இமயமலையில் உற்பத்தியாகும் கங்கை பல்வேறு மாநிலங்கள் வழியாகச் சென்று வங்கக் கடலில் சங்கமிக்கிறது. கங்கை நதி சங்கமிக்கும் முகத்துவாரம் கங்கா சாகர் என்றழைக்கப்படுகிறது. இந்த தீவுக்கு வந்து பக்தர்கள் புனித நீராடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.  தினந்தோறும் அந்திப்பொழுதில் ஹரித்வாரிலும் காசியிலும் கங்கா சாகரத்திலும் ஶ்ரீதாம் மாயாபூரிலும் மற்றும் கங்கை நதி பாய்தோடும் கங்கை கரையில்  கங்கைக்கு கோவில் அமைந்துள்ள சில இடங்களிலும்  கங்கைக்கு ஆரத்தி நடக்கிறது என்பதை நாம் அறிவோம். கங்கை கடலோடு கலக்கும் சங்கமத்தில் நடைபெறும் திருவிழாவை கங்கா சாகர் மேளா என்று அழைக்கப்படுகிறது. பொங்கல் என்று நாம் கொண்டாடும் மகர சங்கராந்தி தினத்தன்று, கங்கை நதியானது வங்காள விரிகுடா கடலில் சேரும் இடத்தில் கங்கா சாகர் மேளா நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள சாகர் தீவில் சூரியன் தனுசு ராசியிலிருந்து மகரராசிக்குள் பிரவேசிக்...

உத்திராயண புண்ணியகாலம்

சூரியன் கடக ராசியிலிருந்து மகர ராசிக்கு நகர்வதே ‘மகர சங்கராந்தி’ என்ற பெயர் வந்ததற்குக் காரணம் மேலும் தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தனது பயணத்தை தைமாத பிறப்பன்று வடக்கு திசையை நோக்கி தொடங்குகிறார். இதை உத்திராயண புண்ணியகாலம் என்பர். உத்திராயணம் என்றால் வடக்குப்புறமான வழி என்று பொருள். இக்காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதல் நாளை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம். உத்தம வாழ்வு தரும் உத்திராயணம் உத்திராயண   காலங்களில் பிறப்பவர்கள் மட்டுமின்றி இறப்பவர்களும் (இயற்கை மரணம்) புண்ணியம் செய்தவர்கள் எனப்படுகிறது. சங்கராந்தி துவங்கி சூரியன் வடதிசை நகரும் இந்த ஆறு மாதமும் அகப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு அற்புதக் காலம். பாரதப் போரில் பிதாமகர் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்து புண்ணியமான இந்த மகரசங்கராந்தி வரும் வரை காத்திருந்து பின் பூவுலகு நீங்கினார். தெற்கு நோக்கி சூரியன் சஞ்சரிக்கும் காலமான ஆடி 1 முதல...

கீதா பண்டா

வெகு காலம் முன்பு, 'அர்ஜுன மிஸ்ரா' என்ற பெயருடைய பண்டா ஒருவர் பூரியில் வசித்து வந்தார். நாள் தோறும் அவர் பகவத் கீதையை முழுவதும் பாராயணம் செய்து வழக்கம். தன்னுடைய முழு நேரத்தையும் கீதை பாராயணம் செய்ய கழித்ததாலும், தன்னுடைய அசையா நம்பிக்கையாலும், உள்ளூர் மக்கள் அவரை 'கீதா பண்டா' என்றே அழைத்தார்கள். அவர் பகவான் ஜகந்நாதரின் பரம பக்தன், முழுமையாக சரணடைந்த ஆத்மா. அவர் எல்லாவற்றுக்கும் பகவான் ஶ்ரீ ஜகந்நாதரையே நம்பியிருந்தார். அவர் எது நடந்தாலும் அதை பகவான் ஶ்ரீ ஜகந்நாதருடைய விருப்பமாக ஏற்றுக் கொண்டார். அதனால் கீதா பண்டா  இன்ப துன்பங்களால் பாதிப்படையாமல் இருந்தார்.  அவர் மிகவும் ஏழ்மையானவர். யாசகம் கேட்டே தனது நித்ய வாழ்வை நடத்தி வந்தார். ஒரு சமயம் பூரியில் ஒரு வாரம் கடும் மழை பெய்தது. கீதா பண்டாவால் வெளியே போய் யாசகம் கேட்க முடியாமல் போயிற்று. அவரிடமிருந்த சொல்ப தானியங்களும் விரைவில் தீர்ந்துபோயின. அவரும் அவரது குடும்பத்தாரும் பட்டினிகிடக்க வேண்டியதாயிற்று. ஆயினும், கீதா பண்டா கலங்கவில்லை . அவர் சந்தோஷமாய் கீதை பாராயணம் செய்து காலம் கழித்தார். வெளியே போக முடியாமல்போனதுப் பற்றி...

துயரங்கள் யாருக்கு இல்லை

 
 

பகவானை தரிசிக்க எளிய வழி

 

ஜட உலகம் துன்பம் நிறைந்த இடம்