பகவான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பல வருடங்களுக்கு முன்னர், அயோத்தியில் தசரத மஹாராஜா வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். அவர்களுக்கு நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லை புத்திர கமேஷ்டி என்ற ஒரு யாகத்தின் மூலம் ஒரே சமயத்தில் நான்கு குழந்தை பெறும் பாக்கியம் பெற்றனர். அதில் கௌசல்யா தேவிக்கு பகவான் ஶ்ரீ ராமசந்திரமூர்த்தியும் கைகேயிக்கு பரதனும் .சுமித்ரைக்கு லட்சுமணன் மற்றும் சத்ருக்னனும் பிறந்தனர். இவர்களில் ராமர் மூத்தவர். இளவரசர்கள் நால்வரும் அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கினர் - போர் கலை, வில் அம்பு பிரயோகிப்பது, வாள் வீச்சு, நாட்டு மக்களை பாதுகாத்தல், அரச கடமைகளை எவ்வாறு செவ்வனே செய்வது - போன்ற அனைத்தையும் கற்றனர். சில காலத்திற்கு பின்னர், ராமர் "சீதா" என்ற அழகிய இளவரசியை மணந்தார். அவர்கள் அயோத்தியில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். தனக்கு வயதாகி விட்டது என்றுணர்ந்த தசரத மகாராஜா, தனது மந்திரிகளுடன் ஆலோசித்து, ஶ்ரீ ராமருக்கு பட்டாபிஷேகம் செய்துவிட்டு, தான் துறவறம் ஏற்று. கானகம் செ...