Skip to main content

Posts

ஶ்ரீ கௌர நித்யானந்தேர தயா

 ஶ்ரீ கௌர நித்யானந்தேர தயா வழங்கியவர் :- லோசன தாஸ் தாகூர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பதம் 1 🍁🍁🍁🍁 பரம கருண பஹு துஇ ஜன  நிதாய் கௌரசந்த்ர  ஸப அவதார ஸார ஷி ரோமணி  கேவல ஆனந்த கந்த மொழிபெயர்ப்பு 🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவான் ஶ்ரீ  நித்யானந்தரும் பகவான் ஶ்ரீ கௌரசந்திரரும் மிகமிக கருணை வாய்ந்தவர்கள், அவர்கள் எல்லா அவதாரங்களின் சாரமாவர். ஆனந்தத்தை மட்டுமே வழங்கக்கூடிய கீர்த்தனம் மற்றும் நர்த்தன வழிமுறையை அறிமுகப்படுத்தியது இந்த அவதாரங்களின் விசேஷ முக்கியத்துவமாகும் பதம் 2 🍁🍁🍁🍁 பஜோ பஜோ பாஇ  சைதன்ய நிதாய்  ஸுத்ரிட  விஷ்வாஸ கரி  விஷய சாடியா ஸே ரஸே மஜியா  முகே போல ஹரி ஹரி மொழிபெயர்ப்பு 🍁🍁🍁🍁🍁🍁🍁 அன்புள்ள சகோதரர்களே பகவான் சைதன்யரையும் நித்யானந்தரையும் திடமான உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வழிபடுமாறு தங்களை வேண்டிக்கொள்கிறேன். இந்த வழியில் கிருஷ்ண உணர்வை அடைய ஒருவன் விரும்பினால், அவன் தன்னுடைய புலனின்ப ஈடுபாடுகளைத் துறக்க வேண்டும். பகவான் சைதன்யர் மற்றும் நித்யானந்தரின் வழிபாட்டில் மூழ்கி, எந்த பௌதிக நோக்கமும் இன்றி, "ஹரே கிருஷ்ண ஹரி ஹரி என்று உச்சரிப்பீராக ப...

பகவான் புத்தராக அவதரித்த நோக்கம்

 பகவான் புத்தராக அவதரித்த நோக்கம் 🍁🍁🍁🍁🍁🍁 தத: கலௌ ஸம்ப்ரவ்ருத்தே ஸம்மோஹாய ஸுர த்விஷாம் புத்தோ நாம்னாஞ்ஜன-ஸுத:கீகடேஷு பவிஷ்யதி தத—அதன் பிறகு; கலௌ—கலி யுகம்; ஸம்ப்ரவ்ருத்தே—விளைந்ததால்; ஸம்மோஹாய—ஏமாற்றும் நோக்கத்திற்காக; ஸுர—ஆத்திகர்கள்; த்விஷாம்—பொறாமை கொண்டவர்கள்; புத்த:—பகவான் புத்தர்; நாம்னா—எனும் பெயர் கொண்ட; அஞ்சன-ஸுத:—அவரது தாயார் அஞ்சனையாவார்; கீகடேஷு—கயா (பீகார்) மாநிலத்தில்; பவிஷ்யதி—நிகழும். மொழிபெயர்ப்பு 🍁🍁🍁🍁🍁🍁🍁 பிறகு, கலி யுக ஆரம்பத்தில், கயா மாநிலத்தில், அஞ்சனாவின் புதல்வராக புத்த பகவான் தோன்றுவார். நம்பிக்கையுள்ள ஆஸ்திகர்களிடம் பொறாமை கொண்டவர்களை தந்திரமாக வழிப்படுத்துவதே அவருடைய அவதார நோக்கமாகும். பொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁 முழுமுதற் கடவுளின் ஒரு சக்தி வாய்ந்த அவதாரமான பகவான் புத்தர், அஞ்சனா தேவியின் புதல்வராக கயா (பீகார்) மாநிலத்தில் தோன்றினார். அவர் தமது சொந்த கருத்தான அகிம்சையைப் பிரசாரம் செய்து, வேதங்களில் அனுமதிக்கப்பட்ட மிருக பலியையும் கூட நிராகரித்தார். புத்த பகவான் தோன்றிய சமயத்தில், மக்கள் பொதுவாக நாஸ்திகத் தன்மை கொண்டவர்களாகவும், மிருக மாமிசத்தை விரும...

ஐந்து விதமான கடன்கள்

  ஐந்து விதமான கடன்கள் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஐந்து விதத்தில் கடன்பட்டுள்ளனர். ****************************** முதலாவதாக, தேவர்களுக்குக் கடன்பட்டுள்ளோம். நாம் சுவாசிப்பதற்கு காற்று, பார்ப்பதற்கு வெளிச்சம், பருகுவதற்கு நீர் என நமது எல்லாத் தேவைகளையும் தேவர்கள் நமக்கு வழங்குகின்றனர். நமது உடலின் ஒவ்வோர் அங்கமும் அசைவும் பல்வேறு தேவர்களால் கட்டுப்படுத்தப்படுவதால், நாம் முப்பத்து மூன்று முக்கோடி தேவர்களுக்கும் கடன்பட்டுள்ளோம். தேவர்களின் கடனைத் திருப்பிச் செலுத்து வதற்கு யாகங்கள் புரிய வேண்டும் என்று கூறப்படுகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் தேவர்களுக்கான கடனை அடைப்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. இரண்டாவதாக, நாம் ரிஷிகளுக்குக் கடன்பட்டுள்ளோம். வியாஸதேவர், பராசரர், நாரதர் போன்ற மகரிஷிகள் நமக்கு தர்ம சாஸ்திரம், மனு சம்ஹிதை, பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களை வழங்கியுள்ளனர். வேத சாஸ்திரங்களைப் படிப்பதன் மூலம் ரிஷிகள் திருப்தியடைகின்றனர். பொதுவாக கலி யுக மக்கள் வேத சாஸ்திரங்களை வயதான காலத்தில் படிப்பதற்குக்கூட தயங்குகின்றனர். மூன்றாவதாக, பித்ருக்களுக்குக் கடன்பட்டு...

கீர்தனீய: ஸதா ஹரி:

 

வேத இலக்கியங்களை படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்

 

வேத இலக்கியங்களை படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்

 

ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி

 ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி வழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி ************************************************* (இன்று ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி மறைந்த தினம் (13-1-2023) இந்த நாளில் , இந்த  தூய பக்தரை நினைவில் கொண்டு உள்ள தூய்மையடைவோம் .) ********** ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி இந்திய வரலாற்றின் இணையற்ற பக்தி கவிகளில் ஒருவர். இந்தியாவில் கிருஷ்ண பக்தி உணர்ச்சிகள் தழைத்து ஓங்குவதற்கு இவரது பக்திப் பாடல்கள் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளன. இவரது கீதா-கோவிந்தமும் அதன் பகுதியான தசாவதார பாடலும் இன்றும் பக்தர்களிடையே பிரபலமானவை. தலைசிறந்த பக்தரான இவரது வாழ்வினை அறிவோம், வாரீர். ஜெயதேவரின் பிறப்பு ********** ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இவ்வுலகில் அவதரிப்பதற்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர், ஜெயதேவர் 12ஆம் நூற்றாண்டில் போஜதேவருக்கும் ரமாதேவிக்கும் நன்மகனாகத் தோன்றினார். இவரது பிறப்பிடம் வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்திலுள்ள கெந்துபில்வா என்று சிலர் கூறுகின்றனர், வேறு சிலரோ ஒடிஸாவிலுள்ள கெந்துளி சாசன் என்று கூறுகின்றனர். ஜெயதேவரின் பிறப்பிடம் குறித்து ஒடியர்களுக்கும் வங்காளர்களுக்கும் பல நூற்றாண்டுகளாக விவாதங்கள்...