Skip to main content

Posts

ஹரிநாம ஒலியதிர்வில் மட்டுமே மனம் அமைதி பெறும்

 

நினைவில் கொள்ளுதல்

 

அனுராக பக்தி

  அனுராக பக்தி “க்ருஷ்ணா” என்பதற்கு “எல்லோரையும் கவர்பவர்” என்று பொருளாகும். விருந்தாவனவாசிகளால் கிருஷ்ணர் மீது தாம் வைத்திருக்கும் மாறாத அன்பினைக் (அனுராக) கைவிட முடியவில்லை. அவர் மீது அவர்கள் கொண்டது கடவுள் மனப்பான்மையன்று. ஏனென்றால் அவர் கடவுளா கடவுள் இல்லையா என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவர் அவர்களின் அன்பினைக் கவர்ந்து கொண்டார். காரணம் அவர் எல்லோரையும் கவரும் கடவுளும் நமது அன்பிற்குரிய ஒரே பரம் பொருளும் ஆவார். ஸ்ரீமத் பாகவதம் 10. 26.13 / பொருளுரை மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI  

பகவான் கபிலதேவர்

   கபிலதேவர் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு அவதாரமே கபிலதேவர்.  சத்யயுகத்தில் தோன்றிய இவர் பண்டைய இந்தியாவின் பாரம்பரியத் தத்துவத்தின் ஒரு முக்கியப் பகுதியாகக் கருதப்படும் ஸாங்கிய யோக தத்துவத்தின் ஆசிரியராவார்.  இவ்வுலகில் பகவான் கபிலர் கர்தம முனிவருக்கும் தேவஹுதி தாயாருக்கும் மகனாக அவதரித்தார். கர்தம முனிவரும்,  தேவஹுதி தாயாரும் தங்களது மகனின் தெய்வீகத் தன்மையை நன்கு அறிந்திருந்தனர்.  உண்மையில் கபிலதேவர் தோன்றுவதற்கு முன்னரே பிரம்மதேவர் தேவஹுதியின் முன் தோன்றி எல்லாவற்றையும் விவரித்து விட்டார்.  அதாவது உனக்கு மகனாக வருபவர் முழுமுதற்கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு அவதாரம் என்றும்,  அவரே உனது ஆன்மிக அறிவைப் பிரகாசிக்கச் செய்து இறுதியில் முக்திக்கான (விடுதலைக்கான) பாதையைக் காட்டுவார் என்றும் கூறினார். தங்க நிறத்திலான தலைமுடியையும்,  தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையும், தாமரைப்பூவின் சின்னங்களுடன் கூடிய தாமரை போன்ற பாதங்களையும் கொண்ட பகவான் கபிலதேவர்,  இந்த பௌதீக உலகோடு நம்மைப் பிணைத்திருக்க...

பக்தர்களை நிந்திப்பது மிகவும் ஆபத்தானது

 

தூய பக்தித் தொண்டு

 

அனைவரும் பங்குகொள்ளும் ஹரி நாம சங்கீர்த்தனம்