Skip to main content

Posts

பலி மகாராஜா

 பலி மகாராஜா  வழங்கியவர் :- சுத்த பக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 மகாராஜா பலி பிரகலாத மஹாராஜரின் பேரன் ஆவார்.  இவர் பகவானுக்கு செய்யும்  பக்தி சேவையில் மற்றொரு அங்கீகாரம் பெற்ற பக்தராவார். மிகவும்  சக்தி வாய்ந்த அரசனான இவர் தேவர்களின் அரசனான இந்திரனுடன் போரிட்டு மூன்று உலகங்களையும்  தன் வசப்படுத்தினார். அவர் யாகம் ஒன்றை நடத்தி பிராமணர்களுக்கு தானம் வழங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம் தேவலோக அதிபதியான இந்திரனுக்கு  நன்மை செய்யும் பொருட்டு பகவான் விஷ்ணு  ஒரு குள்ள பிராமணனின் வடிவில் அதிதிக்கு மகனாகப் பிறந்து மஹாராஜா பலி நடத்தும் யாக சாலைக்கு ஒரு யாசகம் பெரும் பிராமணனைப்  போல் வந்தார்.  அவர் பலி மகாராஜானிடம் தன்னுடைய பாதத்தில் மூன்றடி நிலம் அளந்து தானமாகக் தருமாறு கேட்டார்.  மகராஜா பலியின் ஆன்மீக குருவும் அவரது அரசவையில் தலைமை பிராமணராகவும் இருந்த  சுக்ராச்சாரியார்,  குள்ள பிராமணனின் வடிவில் வந்திருப்பவர் பகவான் கிருஷ்ணர் என்பதைக் அவரால் காண முடிந்தது.  இதனால் அவர் பலியிடம் இந்த சிறுவனின் கோரிக்கைகளை ஏற்காதே என்று அறிவுரை க...

தூய பக்தர்கள் பகவானால் அளிக்கப்படும் சோதனைகளில் எப்போதும் வெற்றி பெறுகின்றனர்.

 

தூய பக்தர்களின் சிறப்பியல்பு

 

ஏகாதசி தினத்தில் தானியங்களால்லான விஷ்ணு பிரசாதத்தை உண்ணலாமா?

ஏகாதசி தினத்தில் தானியங்களால்லான விஷ்ணு பிரசாதத்தை உண்ணலாமா?  🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியின் பக்தி-ஸந்தர்ப, நூலில், ஸ்கந்த, புராணத்திலிருந்து ஒரு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஏகாதசியன்று தானியங்களை உண்பவன் தனது தாய், தந்தை, சகோதர மற்றும் ஆன்மீக குருவைக் கொலை செய்தவனாகிறான் என்றும், அவன் வைகுண்ட லோகத்திற்கு ஏற்றம் பெற்றால்கூட வீழ்ச்சியடைகிறான் என்றும் அங்கே எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏகாதசியன்று தானியங்கள் பருப்புகள் உட்பட அனைத்து தினசரி உணவும் விஷ்ணுவிற்குச் சமைக்கப்படுகின்றன, ஆனால் அந்த விஷ்ணு பிரசாதத்தினைக்கூட ஏகாதசியன்று ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று வைஷ்ணவர் அறிவுறுத்தப்படுகிறார். பகவான் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்படாத எந்த உணவுப் பொருளையும் வைஷ்ணவன் ஏற்பதில்லை என்று கூறப்படுகிறது, ஆனால் ஏகாதசியன்று விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மஹா பிரசாதத்தினைக்கூட வைஷ்ணவன் தீண்டக் கூடாது; அத்தகு பிரசாதம் அப்படியே வைக்கப்பட்டு மறுநாள் உண்ணப்படலாம். பகவான் விஷ்ணுவிற்கு நைவேத்தியம் செய்யப்பட்டதாக இருந்தாலும் ஏகாதசியன்று எந்த வகையான தானியத்தையும் ஏற்பதிலிருந்து ஒருவன் கண்டிப்பாகத் தடை செய்யப்படு...

பாபமோசனி ஏகாதசி

ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். கிருஷ்ண பகவானே, தாங்கள் ஏற்கனவே ஆமலக்கி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கூறினீர்கள். பங்குனி மாதத்தேய்பிறையில் (மார்ச்/ஏப்ரல்) தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி இப்பொழுது எனக்கு விளக்கி கூறுங்கள். இந்த ஏகாதசியின் பெயர் என்ன? மற்றும் இந்த ஏகாதசியை அனுஷ்டிக்கும் வழிமுறையையும் அதனால் அடையும் பலனையும் விளக்கமாக கூறுங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னர்களில் சிறந்தோனே. இந்த ஏகாதசியின் பெயர் பாபமோச்சனி ஏகாதசி இதன் பெருமைகளைக் கூறுகிறேன் கேள். பழங்காலத்தில் ஒரு முறை இந்த ஏகாதசியின் பெருமைகள் லோமஸ முனிவரால் மான்தாதா மன்னரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இந்த ஏகாதசி பங்குனி (மார்ச்/ஏப்ரல்) மாதத் தேய்பிறையில் தோன்றுகிறது. இந்த ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளையும் அகற்றி, வாழ்க்கையின் நரக நிலை அழித்து, அஷ்ட சித்திகளையும் கொடுக்கிறது. லோமஸ முனிவர் கூறினார். பண்டை காலத்தில் தேவர்களின் பொருளாளரான குபேரன், சைத்ரரதா என்ற ஒரு அழகான வனத்தை கொண்டிருந்தார். மலர்களால் நிறைந்திருந்த அவ்வனம், ரம்மியமான சூழலைக் கொண்டிருந்தது. அவ்வனத்தில் கந்தவர்களும...

கடவுள் நம்பிக்கை

  கடவுள் நம்பிக்கை ராஜேஷ் முடிவெட்டிக் கொள்ள வழக்கமாகச் செல்லும் கடைக்குச் சென்றான். முடிதிருத்துபவர் அவனுக்கு நெருக்கமான நண்பர். இருவரும் பல விஷயங்கள் பற்றி மகிழ்ச்சியாக உரையாடுவர். அன்றும் அப்படியே பலவிஷயங்கள் பற்றி பேசினர். இடையில் கடவுளைப் பற்றிப் பேச்சு வந்தது. முடிதிருத்துபவர், எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுள் இருக்கிறார் என்று நான் நம்ப மாட்டேன்! என்றார். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? என்று கேட்டான் ராஜேஷ். காரணம் மிகச் சுலபமானது. தெருவில் போய்ப்பாருங்கள். கடவுள் இருந்தால் நோயால் வாடுபவர்கள் இருப்பார்களா? கடவுள் இருந்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் தெருவில் அலையுமா? கடவுள் இருந்தால் துன்பமும், வலியும் இராது. இதையெல்லாம் அனுமதிக்கும் கடவுள் நிச்சயம் இருப்பார் என்று நான் நம்பவில்லை, என்றார் முடிதிருத்துபவர். ராஜேஷ் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. வீணாக விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்று மவுனமானார். முடிதிருத்தும் வேலைமுடிந்து, ராஜேஷ் வெளியே போனார். அவர் போன சற்று நேரத்தில், வீதியில் நீண்ட தாடியும் அடர்ந்த முடியுமாய், ஒரு ஆள் நிற்பதை கடைக்காரர் பார்த்தார். அந்த நபரைப் பார்த்தால், மு...

ஆத்மா