Skip to main content

Posts

பகவான் ஶ்ரீ நரசிம்மர்

 

பகவான் ஶ்ரீ நரசிம்மர் பிரார்த்தனை

 

ஹரே கிருஷ்ண மஹா மந்திரம்

  ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே

ஸ்ரீ பஞ்ச தத்வ மந்திரம்

  ஸ்ரீ - க்ருஷ்ண - சைதன்ய பிரபு - நித்யானந்த ஸ்ரீ - அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி - கௌர - பக்த - வ்ருந்த ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் , பிரபு நித்யானந்தர் , ஸ்ரீ அத்வைதர் , கதாதரர் , ஸ்ரீவாஸர் மற்றும் பக்தி நெறியிலுள்ளோர் அனைவருக்கும் எனது வணக்கங்கள் .

ஸ்ரீ ராதா பிரணாம

  தப்த - காஞ்சன - கௌராங்கி ராதே ஸ்ருந்தாவனேஷ்வரி வ்ருஷபானு - ஸுதே தேவி ப்ரணமாமி ஹரி - ப்ரியே விருந்தாவனத்தின் ராணியும் , உருக்கிய பொன்னிற மேனி கொண்டவருமான ராதாராணிக்கு வணக்கம் . மன்னர் விருஷபானுவின் மகளான தாங்கள் , பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர் .

ப்ரயோஜனாதிதேவ பிரணாம

  ஸ்ரீமான் ராஸ ரஸாரம்பீ வம்ஷீ வட தட ஸ்தித: கர்ஷன் வேணு ஸ்வனைர் கொபீர் கோபீநாத: ஸ்ரீயேஸ்துந: ராஸ நடனம் என்னும் தெய்வீக அன்புப் பரிமாற்றத்தை யமுனை கரையில் உள்ள வம்சிவடத்தின் கரையில் நின்றபடி கோபியர்களின் கவனத்தைத் தனது  குழலோசையினால் கவரக்கூடியவருமான ஶ்ரீ  கோபிநாதர் நம்மீது  ஆசியை அருளட்டும்

அபிதேயாதிதேவ பிரணாம

  திவ்யத் விருந்தாரண்ய கல்ப த்ருமாத: ஸ்ரீமத் ரத்நாகார ஸிம்ஹாஸனஸ்தௌ ஸ்ரீமத் ராதா ஸ்ரீல கோவிந்த தேவௌ ப்ரேஷ்டாலீபி: ஸேவ்யமானௌ ஸ்மராமி விருந்தாவனத்தின் இரத்தினக் கோயிலில், கற்பக மரத்தடியில், பிரகாசமான சிம்மாசனத்தில் வீற்றுள்ளவர்களும், மிகவும் அந்தரங்கமான சேவகர்களால் சேவை செய்யப்படுபவர்களுமான ஸ்ரீ ஸ்ரீ ராதா-கோவிந்தருக்கு நான் எனது பணிவான வணக்கத்தை அர்ப்பணிக்கின்றேன்.