ஸ்ரீ - க்ருஷ்ண - சைதன்ய பிரபு - நித்யானந்த ஸ்ரீ - அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி - கௌர - பக்த - வ்ருந்த ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் , பிரபு நித்யானந்தர் , ஸ்ரீ அத்வைதர் , கதாதரர் , ஸ்ரீவாஸர் மற்றும் பக்தி நெறியிலுள்ளோர் அனைவருக்கும் எனது வணக்கங்கள் .
ஸ்ரீமான் ராஸ ரஸாரம்பீ வம்ஷீ வட தட ஸ்தித: கர்ஷன் வேணு ஸ்வனைர் கொபீர் கோபீநாத: ஸ்ரீயேஸ்துந: ராஸ நடனம் என்னும் தெய்வீக அன்புப் பரிமாற்றத்தை யமுனை கரையில் உள்ள வம்சிவடத்தின் கரையில் நின்றபடி கோபியர்களின் கவனத்தைத் தனது குழலோசையினால் கவரக்கூடியவருமான ஶ்ரீ கோபிநாதர் நம்மீது ஆசியை அருளட்டும்