Skip to main content

Posts

ஸ்ரீதாம் மாயாபூரில் பகவான் நரசிம்மர் தோன்றிய வரலாறு

  ஸ்ரீதாம் மாயாபூரில் பகவான் நரசிம்மர் தோன்றிய வரலாறு வழங்கியவர் : ஸ்ரீமதி தேவி தாஸி அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சர்வதேச தலைமையகம் மேற்கு வங்காளத்திலுள்ள மாயாபூரில் உள்ளது . அங்கு வீற்றிருக்கும் உக்கிர நரசிம்மர் ( அருகிலிருக்கும் படத்தைப் பார்க்கவும் ) அங்கு வரும் பக்தர்களைக் கவர்ந்து பற்பல அதிசயங்களை நிகழ்த்தி வருகிறார் . அவர் அங்கு தோன்றியதன் அற்புத வரலாற்றினை இங்கு சுருக்கமாக வழங்குகிறோம் . கொள்ளையர்களின் தாக்குதல் 1984 ம் வருடம் , மார்ச் மாதம் 24 ம் தேதியன்று மதியம் 12:20 மணியளவில் , சுமார் முப்பத்தைந்து குண்டர்கள் , ஸ்ரீதாம் மாயாபூரில் உள்ள இஸ்கானின் சந்திரோதய கோயிலை ஆயுதங்களுடனும் குண்டுகளுடனும் தாக்கினர் . பக்தர்களை மிகவும் மோசமாக நடத்திய அந்தக் கொள்ளையர்கள் , ஸ்ரீல பிரபுபாதரின் மூர்த்தியையும் ஸ்ரீமதி ராதாராணியின் விக்ரஹத்தையும் திருடிச் செல்ல முடிவு செய்தனர் . இதனால் மிகவும் அதிர்ச்சிக்குள்ளான பக்தர்கள் , அக்கொள்ளையர்களை பயமின்றி எதிர் கொண்டனர் . ஸ்ரீல பிரபுபாதரையும் , ஸ்ரீமதி ராதாராண...