புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா? 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 புல்லாங்குழல் இல்லாத கிருஷ்ணரின் படம் கிடைக்குமா?” புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரை வீட்டில் வைத்தால், வீட்டில் உள்ள செல்வம் அனைத்தையும் கிருஷ்ணர் ஊதி விடுவார் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 “புல்லாங்குழல் இல்லாத கிருஷ்ணரின் படம் கிடைக்குமா?” புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரை வீட்டில் வைத்தால், வீட்டில் உள்ள செல்வம் அனைத்தையும் கிருஷ்ணர் ஊதி விடுவார் என்பது அவர்களின் நம்பிக்கை. அவர்களது நம்பிக்கையில் ஏதேனும் உண்மை உள்ளதா, கிருஷ்ணரை புல்லாங்குழலுடன் வைக்கலாமா கூடாதா? சற்று அலசிப் பார்க்கலாம். கிருஷ்ணரின் திருமேனி வர்ணனை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 கிருஷ்ணரை வழிபட விரும்புவோர் கிருஷ்ணரை கிருஷ்ணராக வழிபட வேண்டும். அதாவது கிருஷ்ணருடைய திருமேனியைப் பற்றிய வர்ணனைகள் சாஸ்திரங்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ, அதன்படி கிருஷ்ணரின் படங்களும் கிருஷ்ணரின் விக்ரஹங்களும் அமைய வேண்டும். அப்போதுதான் கிருஷ்ணர் கிருஷ்ணராக இருப்பார். கிருஷ்ணரின் திருமேனி சாஸ்திரங்களில் பல இடங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. பிரம்ம ஸம்ஹிதையில் (5.30) பிரம்மதேவர் அத்திருமேனியின...