யமுனைநதியின் பூலோக பயணம் ( ஆதாரம் - கர்க சம்ஹிதை ) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 கோலோகத்திலிருக்கும் பகவான் கிருஷ்ணரின் கட்டளையின் பேரில், யமுனா தேவி, பகவானை தரிசித்து விட்டு பூமிக்கு புறப்பட தயாரானார். அப்போது ஆன்மீகமான வ்ரஜா நதியும் கங்கை நதியும் யமுனைக்குள் புகுந்து கொண்டன. இந்த காரணத்தால் தான், யமுனை நதி சிறந்ததாகவும், பகவான் கிருஷ்ணரின் முதல் ராணியாகவும் கருதப்படுகிறது. வ்ரஜா நதியின் ஓட்டத்தை உடைத்துக்கொண்டு, மிகுந்த சக்தியுடன் யமுனை நதி கோலோகத்தை கடந்தது. பல அண்டங்களை தாண்டி, கங்கை நதியின் நீரோட்டத்தையும் உடைத்துக்கொண்டு சீறிப்பாய்ந்து. பகவான் வாமன தேவரின் பாத விரலால், அண்டத்தின் மேல் ஏற்பட்டிருந்த ஓட்டையின் வழியாக நுழைந்து, துருவ மஹாராஜருடைய உலகத்தின் (துருவ லோகத்தில் ) நுழைந்தது. அதன் பின்னர் பிரம்மலோகம் சென்று, அங்கிருந்து பல்வேறு லோகங்களுக்கு சென்று, ஒரு வழியாக சுமேரு பர்வதத்தை அடைந்தது. யமுனையின் சக்தி, சுமேரு பர்வதத்தின் பாறைகளை உடைத்து தள்ளியது. அந்த இடத்தில் யமுனை , கங்கை நதியை பிரிந்தது . கங்கை நதி அங்கிருந்து ஹிமாவதி பர்வதத்திற்கு சென்றது. அதே சமயம், யமு...