Skip to main content

Posts

ஸ்ரீ ரகுநாததாஸ கோஸ்வாமி

ஸ்ரீ ரகுநாததாஸ கோஸ்வாமி வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆 மேற்கு வங்காளத்தில் ஸப்தக்ராமம் என்ற இடத்தில் ஹிரண்ய மஜீம்தார். . கோவர்தன  மஜீம்தார். என்ற இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் சிறந்த பண்டிதர்கள். ராஜ வம்சத்தை சேர்ந்த அவர்களின் குலத்திற்கு கோவர்தன மஜீம்தாரின் மகனான ரகுநாத தாஸரே ஒரே வாரிசு ஆவார். அவர் ஶ்ரீல பலராம ஆசார்யரிடம் கல்வி கற்று  சமஸ்கிருதம். ஸாஹித்யம். சாஸ்த்ரம் இவற்றில் சிறந்து விளங்கினார். அவருக்கு இளமையில் இருந்தே லௌகீக விஷயங்களில் நாட்டம் இல்லை. ஒருமுறை ஹரிதாஸ் தாகூர் சாந்திப்பூர் வந்தார். பலராம ஆசார்யர் அவரை வரவேற்று, அவருக்கு ஒரு குடில் அமைத்து உபசரித்து வந்தார். ரகுநாத தாஸ், ஹரிதாஸரின் பஜன நிஷ்டை, திவ்ய பாவாவேசம் இவற்றால் கவரப்பட்டார். பரம பாகவதரான ஹரி தாஸரின் திவ்யதரிசனம், அவரது கருணை, மற்றும்  ஆசீர்வாதம் இவற்றின் மூலம் ரகுநாதரின் ஸாதனா பக்தி என்னும் கதவு திறந்தது. அதன் மூலம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கருணை கிடைத்தது. ரகுநாதரின் வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் உரையாடலில் பேசப்படும் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின்  ரூப மாதுர்யம், ல...

ஸ்ரீ கெளரிதாஸ பண்டிதர்

  ஸ்ரீ கெளரிதாஸ பண்டிதர் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஸ்ரீ கெளரிதாஸ பண்டிதருடைய தாய்  தந்தையின் பெயர் ஸ்ரீ கமல தேவி, ஸ்ரீ காமேஸரி மிஸ்ரர், அவருடைய ஐந்து சகோதர்கள்: தாமோதரர், ஜகன்னாதர், சூர்யதாஸர், கிருஷ்ணதாஸர், நரசிம்ம சைதன்யர்.சூரியதாஸர் தனது புதல்விகளாகிய வசுதா மற்றும் ஜானவா தேவி இருவரையுமே பகவான் ஶ்ரீ நித்யானந்தருக்கு மணமுடித்தார். விருந்தாவன லீலையில் சுபலா சகாவாக இருந்த கெளரிதாஸர் பகவான் ஶ்ரீ கிருஷ்ணருடைய முக்கியமான பன்னிரெண்டு, அதாவது துவாதச கோபால நண்பர்களுள் ஒருவராவார்.  ஒருமுறை பகவான் ஶ்ரீ சைதன்யரும், பகவான் நித்யானந்தரும் கெளரிதாஸரை சந்திக்க சாந்திபுரிலிருந்து தாங்களே படகில் துடுப்புபோட்டு கங்கையை கடந்து, அம்பிகா கல்னாவிற்கு வந்தனர். தனது கையிலிருந்த துடுப்பை கெளரிதாஸரிடம் தந்த பகவான் ஶ்ரீ சைதன்யர், இந்த துடுப்பின் மூலமாக மக்களை பெளதிக கரையிலிருந்து அக்கரைக்கு அழைத்துச் செல்வீராக” என்று ஒப்படைத்தார். இன்றும்  கெளரிதாஸரின் இல்லத்தில் உள்ள கோவிலில் அந்த துடுப்பு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மற்றொரு முறை சைதன்யரும் நித்யானந்தரும் “ஹரி ...

பானிஹாட்டி சிடா-தஹி திருவிழா

  பானிஹாட்டி  சிடா-தஹி திருவிழா ( ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், அந்திய லீலை, அத்யாயம் 6 / மொழிபெயர்ப்பு ) 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் முக்கிய சீடர்களில் ஒருவராகவும் விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளில் ஒருவராகவும் விளங்குபவர் ரகுநாத தாஸ கோஸ்வாமி அவர்கள். மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தைச் சார்ந்த அவர், பகவத் பக்தியினால் ஆட்கொள்ளப்பட்டு, ஸ்ரீ சைதன்யரிடம் சரணடைய முனைந்தார். பல முறை வீட்டை விட்டு ஓடியபோதிலும், அவரது தந்தை தனது ஆட்களைக் கொண்டு அவரை மீண்டும்மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார். அச்சூழ்நிலையில், பானிஹாட்டி எனப்படும் இடத்தில், ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் கட்டளைப்படி, ரகுநாதர் தயிரையும் அவலையும் கொண்டு ஒரு வித்தியாசமான விருந்திற்கு ஏற்பாடு செய்தார். ரகுநாதரின் மீது திருப்தியுற்று நித்யானந்தர் கருணையைப் பொழிய, அக்கருணையினால் குறுகிய காலத்திலேயே ரகுநாதரால் ஸ்ரீ சைதன்யருடன் இணைய முடிந்தது. ரகுநாதர் ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் கருணையினால் ஸ்ரீ சைதன்யரை அடைந்தார் என்பதை நினைவுகொள் வதற்காகவும் நாமும் அக்கருணையின் சிறு துளியைப் பருகுவதற்காக...

ஶ்ரீநிவாச ஆச்சாரியர்

  ஶ்ரீநிவாச ஆச்சாரியர் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 வாஞ்சா கல்பதருப யஷ் ச க்ருபா ஸிந்துப்ய  ஏவ ச    பதிதானாம் பாவனேப்யோ வைஷ்ணவேப்யோ  நமோ நம: நிலையிழந்த ஆத்மாக்களிடம் கருணை மிக்கவர்களும், கற்பக விருட்சங்களைப் போன்று எல்லோரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்பவகர்களுமான பகவானின் வைஷ்ணவ பக்தர்கள் அனைவருக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.  கதாதர பட்டாச்சாரியர் ஸ்ரீனிவாச ஆச்சாரியாரின் தந்தை 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆  கதாதர பட்டாச்சாரியாரரும் அவரது மனைவி லட்சுமி ப்ரியாவும் "நிமாய் பண்டிட்"  - பகவான் ஸ்ரீசைதன்ய மஹாபிரபு வின் மிகச் சிறந்த பக்தர்கள் ஆவர்.  ஒருமுறை கதாதர பட்டாச்சாரியார் பகவான் சைதன்யரை தரிசனம் செய்வதற்காக அவரது கிராமத்தை விட்டு மாயாப்பூருக்குச் செல்ல முடிவு செய்தார். அவ்வாறு செல்கையில் தனது நெருங்கிய நண்பர் கேஷவ பாரதி  வசிக்கும் கட்வா என்ற சிறிய கிராமத்திற்கு சென்று பின் தன் பயணத்தை தொடரலாம் என்று திட்டமிட்டிருந்தார்.  அப்போது அவர் செல்லும் அதே வழியில் ஆயிரக்கணக்கான மக்கள் ச...

ஸ்ரீவாஸ பண்டிதர்

  ஸ்ரீவாஸ பண்டிதர் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆 ஸ்ரீவாஸ-பண்டிதோ தீமான் ய: புரா நாரதோ முனி:  பர்வதாக்யோ முனி-வரோ ய ஆஷீன் நாரத-ப்ரிய: ஸ்ரீ-ராம-பண்டித: ஸ்ரீமான் தத்-கனிஷ்ட-ஸஹோதர: நாம்னாம்பிகா வ்ரஜே தாத்ரீ ஸ்தன்ய-தாத்ரீ ஷ்திதா புரா சைவியம் மாலினீ நாம்னீ ஸ்ரீவாஸ-க்ருஹினீ மதா கிருஷ்ண லீலையின் நாரதமுனிவரே கெளர லீலையின் ஸ்ரீவாஸ பண்டிதராவார். நாரத முனிவரின் நண்பரான பர்வத முனிவரே ஸ்ரீவாஸ பண்டிதரின் இளைய சகோதரர் ஸ்ரீ ராம பண்டிதராவார். ஸ்ரீவாஸ பண்டிதரின் மனைவி மாலினி தேவி, விரஜத்தில் கிருஷ்ணருக்கு பாலூட்டும் செவிலித்தாயான அம்பிகா ஆவார். (கெளர- கணோதேஷ- தீபிகா 90)  பஞ்ச தத்துவம் 🍁🍁🍁🍁🍁🍁 பஞ்சதத்வாத்மகம் க்ருஷ்ணம்  பக்தரூப ஸ்வரூபகம்  பக்தாவதாரம் பக்தாக்யம்  நமாமி பக்தஷக்திகம் பக்த ரூபம், பக்த ஸ்வரூபம், பக்த அவதாரம், பக்தன் மற்றும் பக்த சக்தி, எனப்படும் தமது தோற்றங்களிலிருந்து வேறுபடாதவரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணருக்கு நான் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.  (சைதன்ய சரிதாம்ருதம் 1.1.14) ...