ஸ்ரீ ரகுநாததாஸ கோஸ்வாமி வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆 மேற்கு வங்காளத்தில் ஸப்தக்ராமம் என்ற இடத்தில் ஹிரண்ய மஜீம்தார். . கோவர்தன மஜீம்தார். என்ற இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் சிறந்த பண்டிதர்கள். ராஜ வம்சத்தை சேர்ந்த அவர்களின் குலத்திற்கு கோவர்தன மஜீம்தாரின் மகனான ரகுநாத தாஸரே ஒரே வாரிசு ஆவார். அவர் ஶ்ரீல பலராம ஆசார்யரிடம் கல்வி கற்று சமஸ்கிருதம். ஸாஹித்யம். சாஸ்த்ரம் இவற்றில் சிறந்து விளங்கினார். அவருக்கு இளமையில் இருந்தே லௌகீக விஷயங்களில் நாட்டம் இல்லை. ஒருமுறை ஹரிதாஸ் தாகூர் சாந்திப்பூர் வந்தார். பலராம ஆசார்யர் அவரை வரவேற்று, அவருக்கு ஒரு குடில் அமைத்து உபசரித்து வந்தார். ரகுநாத தாஸ், ஹரிதாஸரின் பஜன நிஷ்டை, திவ்ய பாவாவேசம் இவற்றால் கவரப்பட்டார். பரம பாகவதரான ஹரி தாஸரின் திவ்யதரிசனம், அவரது கருணை, மற்றும் ஆசீர்வாதம் இவற்றின் மூலம் ரகுநாதரின் ஸாதனா பக்தி என்னும் கதவு திறந்தது. அதன் மூலம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கருணை கிடைத்தது. ரகுநாதரின் வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் உரையாடலில் பேசப்படும் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ரூப மாதுர்யம், ல...