Skip to main content

Posts

பக்தர்களின் சாதனைகள் அழிவுபெறுவதில்லை

 

எப்போதும் புத்தம் புதியவராக திகழும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

 

சர்வ காரண காரணம்

 

காமிகா ஏகாதசி

ஆஷாட, மாத கிருஷ்ண‌பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை காமிகா ஏகாதசியாக கொண்டாடுவர். காமிகா ஏகாதசியின் விரத கிமை நாம் காண்போம்.மஹான்களைப் போன்று புண்ணியசீலரான யுதிஷ்டிர மஹாராஜா ஸ்ரீ கிருஷ்ணரிடம் - " மேலான பரம்பொருளே ! ஆஷாட, மாத சுக்லபட்சத்தில் வரும் புண்ணிய திதியான தேவசயனி ஏகாதசியைப் பற்றியும், அந்நாளில் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிட்டும் ஒப்பற்ற பலன்களை பற்றியும் அறிந்து கொண்டேன்.இப்பொழுது ஆஷாட ,சிராவண மாதத்தின் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி திதியைப்பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஆகையால் கோவிந்தா, என் மீது கருணை கொண்டு, அந்த ஏகாதசியின் பெருமைகளை விரிவாக சொல்லுங்கள். முதன்மையான தெய்வமே, வாசுதேவா!, எனது பணிவான நமஸ்காரங்களை தங்களது திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்" என்று கூறினார்.ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு பதிலளிக்கையில் - " தர்மத்தை எந்நிலையிலும் விடாது காக்கும் யுதிஷ்டிரா,  ஒருவனது பாபங்களை எல்லாம் அழித்து சுபவிளைவுகளை ஏற்படுத்தும் ஏகாதசி உபவாசத்தின் மகிமையை சொல்கிறேன். கவனமாக கேள்." என்று கூறிவிட்டு பின்வருமாறு கூறலாயினார்."ஒரு முறை, நாரத ரிஷியும...

இரவில் சூரியன்

  உபாக்யானே உபதேசம் (  அருளியவர் :-  ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி ) மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆 இரவில் சூரியன் 🔆🔆🔆🔆🔆🔆🔆 ஒரு முறை செல்வ செழிப்பு மிக்க நிலக்கிழார் ஒருவர், அமாவாசை இரவன்று வானில் சூரியனை காண வேண்டும் என்று விருப்பம் கொண்டார். அவரது துதிபாடுபவர்கள் சிலர், "ஐயா! நீங்கள் ஆசை கொண்டால் அது உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இதன் மூலம், அனைவரும் உங்கள் புகழ் பற்றி பேசுவர்", என்று கூறினர். அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன், ஒரு மண்ணெண்னை விளக்கை விண்ணில் உயர்த்தி பிடித்தபடி, "ஐயா இப்போது வானில் சூரிய ஒளி போன்ற வெளிச்சம் தெரிகிறது பாருங்கள்", என்று கூறினான். அதற்கு இன்னொருவன், “இவ்வளவு சிறிய விளக்கு, சூரிய ஒளியை போன்று வெளிச்சத்தை தராது. ஒரு கோடி மெழுகுவருத்திகளை ஒரே சமயத்தில் ஏற்றினால், அதன் ஒளி சூரிய வெளிச்சம் போன்று இருக்கும்", என்று கூறினான். அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும் அவர் திருப்தியடையவில்லை. அறிவியல் தெரிந்த சிலர், சக்திவாய்ந்த மின் விளக்கு போன்ற ஏற்பாடும் செய்திருந்தனர். ஆனால் எந்த முயற்சியும் வெற்றி பெறவில...

ஸ்ரீல லோகநாத் கோஸ்வாமி

  பகவான் ஶ்ரீ சைதன்ய மகாபிரபு, சந்நியாசம் ஏற்பதற்கு முன் அவரை சந்தித்த ஒரே கோஸ்வாமி, ஶ்ரீல லோகநாத் கோஸ்வாமி ஆவார். ஶ்ரீல லோகநாத் கோஸ்வாமி மகாபிரபுவின் நேரடி சீடர் மற்றும் நெருங்கிய சகாவாக கருதப்படுகிறார். சைதன்ய மகாபிரபுவை நவத்வீபில் சந்திக்க வருவதற்கு முன் தற்போதைய பங்களாதேஷில் உள்ள ஜெஸ்ஸோர் மாவட்டத்தில் உள்ள தாலகடி கிராமத்தில் வசித்தார். அதற்கு முன் காங்சடாபாடா எனும் இடத்தில் வசித்து வந்தார். லோகநாத் கோஸ்வாமியின் தந்தை பெயர் பத்மநாப சக்கரவர்த்தி, தாயார் பெயர் சீதாதேவி என்பதை 'பக்தி ரத்னாகரா' என்னும் கிரந்தத்திலிருந்து இந்த தகவலை நாம் காணலாம். லோகநாதரின் சகோதரர் பிரகல்பா பட்டாச்சாரியாரின் சந்ததியினர் 'தாலகடி"' கிராமத்தில் இன்றளவும் வசித்து வருகின்றனர். 'பூகர்ப்ப கோஸ்வாமி', லோகநாத கோஸ்வாமியின் நெருங்கிய சகா மற்றும் எப்போதும் உடன் இருப்பவர் ஆவார். 'சாதன தீபிகா' என்னும் நுலின்படி பூகர்ப கோஸ்வாமி, லோகநாதரின் தந்தைவழி மாமா ஆவார். ஶ்ரீல லோகநாத கோஸ்வாமி பகவான் ஶ்ரீ சைதன்ய மகா பிரபுவை சந்தித்தல் 🔅🔅🔅🔅🔅🔅 லோகநாத கோஸ்வாமி 1510ல் தனது குடும்ப வாழ்க்கையிலி...

நித்தியமாக பகவானின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம்

பரம புருஷ பகவானால் (விஷ்ணு அல்லது கிருஷ்ணர்) தமது சொந்த ஆயுதமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஆயுதம்(சுதர்சன சக்கரம்), பிரம்மாஸ்திரம் அல்லது அதற்கொப்பான பிற ஆயுதங்களையோ விட அதிக சக்தி வாய்ந்ததாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அக்னிதேவன் இந்த ஆயுதத்தை அளித்தார் என்று வேத இலக்கியங்கள் சிலவற்றில் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் பகவான் இந்த ஆயுதத்தை நித்தியமாக தமது கையில் ஏந்தியிருக்கிறார். ருக்ம மகாராஜன் ருக்மினியை பகவானுக்கு அளித்த அதே முறையில்தான் அக்னிதேவனும் இந்த ஆயுதத்தை கிருஷ்ணருக்கு அளித்தார். இத்தகைய அன்பளிப்புக்களை பகவான் தமது பக்தர்களிடமிருந்து ஏற்றுக்கொள்கிறார். அந்த அன்பளிப்புகள் நித்தியமாக அவருக்குச் சொந்தமானவை என்றாலும் அவற்றை அவர் அவ்வாறு ஏற்றுக் கொள்கிறார். மகாபாரதத்தின் ஆதி பர்வத்தில் இந்த ஆயுதத்தைப் பற்றிய விரிவான விளக்கம் ஒன்றுள்ளது. தன்னுடன் போட்டியிட்ட சிசுபாலனைக் கொல்ல பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த ஆயுதத்தை உபயோகித்தார். இந்த ஆயுதத்தினால் சால்வனையும் கூட அவர் கொன்றார். மேலும் சில சமயங்களில், நண்பனான அர்ஜுனனுடைய எதிரிகளை அர்ஜுனன் கொல்வதற்கு அதை உபயோகிக்க வேண்டுமென்று பகவான் விரு...